F

படிப்போர்

Tuesday 11 September 2012

63.ஒருவரை

ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர்
        ஒருகுண வழியுறாத                        பொறியாளர்
உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி 
        உறநம னரகில்வீழ்வ                 ரதுபோய்ப்பின்
வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி
           மறைவரி னனையகோல                   மதுவாக
மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு
        வடிவுற அருளிபாத                         மருள்வாயே
திரிபுர மெரியவேழ சிலைமத னெரியமூரல்
        திருவிழி யருள்மெய்ஞ்ஞான              குருநாதன்
திருசரஸ் வதிமயேசு வரியிவர் தலைவரோத
        திருநட மருளுநாத                            மருள்பாலா
சுரர்பதி அயனுமாலு முறையிட அசுரர்கோடி
        துகளெழ விடுமெய்ஞ்ஞான           அயிலோனே
சுககுற மகள்மணாள னெனமறை பலவுமோதி
        தொழமுது பழநிமேவு                      பெருமாளே.

பதம் பிரித்து உரை

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர்
ஒரு குண வழி உறாத பொறியாளர்

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் = ஒருவர் சொல்லுவதை மற்றொருவர் இன்னதென்று தெரிந்து அறிய மாட்டாத வர்களாகிய.  மத விசாரர் = மத வாதிகள். ஓரு குண வழி உறாத பொறியாளர் = ஒரு கொள்கை வழியில் நிலைத்து நிற்காத குணத்தை உடையவர்கள்.

உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி
உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின்

உடல் அது சதம் என நாடி = இந்த உடல் நிலையானது என்று நினைத்து களவு பொய் கொலைகள் = களவும், பொய்யும், கொலையும் ஆடி உற = செய்து கொண்டு வர நமன் நரகில் வீழ்வர் = யம லோகத்து நரகத்தில் விழுவார்கள் அது போய் பின் = அந்த நிலை போன பின்னர்.

வரும் ஒரு வடிவம் மேவி இரு வினை கடலுள் ஆடி
மறைவர் இன அனைய கோலம் அது ஆக

வரும் = ஏற்படும் ஒரு வடிவம் மேவி = வினையினால் வருகின்ற ஒரு உடம்பை எடுத்து  இரு வினை கடலுள் ஆடி = நல்வினை, தீ வினை என்னும் இரு வினைகளாகிய கடலில் உளைந்து மறைவர் = மறைந்து போவார்கள்  இன அனைய கோலம் அதுவாக = இத்தகையோரது வாழ்வு இப்படியாக

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாதம் அருள்வாயே

மருவிய = திருவருள் பொருந்திய பரம ஞான சிவகதி பெறுக = பரமஞான மயமான சிவகதியைப் பெற்று நீறு அருளி = திரு நீற்றினை வடிவுற அருளி = நல்ல நிலையைப் பெற எனக்கு நல்கி பாதம் அருள்வாயே = உனது திருவடியைத் தருவாயாக.

திரி புரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல்
திரு விழி அருள் மெய் ஞான குரு நாதா

திரிபுரம் எரிய = முப்புரங்கள் எரிந்து விழவும் வேழ சிலை = கரும்பு வில்லைக் கொண்ட மதன் எரிய = மன்மதன் எரிந்து விழவும்  மூரல் = புன் சிரிப்பாலும் திரு விழி = திருக் கண்ணாலும் அருள் மெயஞ் ஞான குரு நாதன் = அருள் புரிந்த மெய்ஞ்ஞான குரு நாதனும்.

திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத
திரு நடனம் அருளு(ம்) நாதன் அருள் பாலா

திரு = இலக்குமி சரஸ்வதி = கலைமகள்  மயேசுவரி =  மகேஸ்வரி இவர்  தலைவர் ஓத = இவர்களுடைய தலைவர்களான திருமால், பிரமன், உருத்திரன் என்ற மும்மூர்த்திகளும் ஓதிப் போற்ற  திரு நடம் அருளும் நாதன் = திரு நடனம் புரிபவனும் ஆகிய  சிவ பெருமான். அருள் பாலா = அருளிய குழந்தையே.

சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி
துகள் எழ மெய் ஞான அயிலோனே

சுரர் பதி = தேவர்கள் தலைவனான இந்திரனும் அயனும் மாலும் முறையிட = பிரமனும், திருமாலும் ஓலமிட அசுரர் கோடி துகள் எழ = அசுர கோடிகள்  பொடியாகுமாறு  விடும் = செலுத்திய  மெய்ஞ்ஞான அயிலோனே = மெய்ஞ்ஞான வேலாயுதனே.

சுக குற மகள் மணாளன் என மறை பலவும் ஓதி
தொழ முது பழநி மேவு பெருமாளே.

சுக = இன்பத்தைத் தரும் குற மகள் = குறமகள் வள்ளியின் மணாளன் = கணவன் என = என்று மறை பலவும் ஓதி தொழு = வேதங்கள் பலவும் போற்றிப் புகழ முது பழநி மேவு பெருமாளே = பழைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

ஒருவர் சொல்லுவதை மற்றொருவர் இன்னதென்று தேர்ந்து அறியாத சமய வாதிகள் நிலையாத மனத்தை உடையவர்கள், இவ்வுடல் நிலையானது என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும்  செய்து மறைந்து போவர். பின்னர் மற்றொரு உருவத்தை அடைந்து, இருவினைக் கடலில் உளைந்து, மறைவர்.
இங்ஙனம் அடியேன் அலையாமல், திரிபுரங்களையும், மன்மதைனையும் எரித்தவரும், மெய்ஞ்ஞான குருநாதரும், இந்திரனும், பிரமனும், ருத்திரனும் போற்ற நடனம் செய்பவருமான சிவபெருமான் அருளிய குழந்தையே, இந்திரனும், பிரமனும், மாலும் ஓலமிட அசுரர்களைத் தூளாகச்  செலுத்திய மெய்ஞ்ஞான வேலாயுதனே,வள்ளியின் கணவனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

ஒப்புக:

அ. சமய வாதிகள் ..... 
·        காதிமோதி வாதாடு நூல்கற்றிடுவோரும்...மாறிலாத மாகாலனூர்புக் கலைவாரே)............................................. திருப்புகழ் (காதிமோதும்)
ஆ. உடலது சதமென நாடி ...... 
(எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்
 சரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க
நதியெனக் கென்னும் பூன்னாய் எனக்கெனும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே)--- பட்டினத்தார்.

புரத்தை சிரித்து அழித்தார். மன்மதனைப் பார்த்து எரித்தார்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published