F

படிப்போர்

Thursday, 13 September 2012

68. கருவினுருவாகி

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து                      மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து                       மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று                          மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அனுதினமும் நாண மின்றி                அழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த                      மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று                      வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த                            குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற                      பெருமாளே.
-       68 பழநி

பதம் பிரித்து உரை

கருவின் உறுவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்து மதனாலே

கருவின் உருவாகி வந்து = கருவில் உருவாகித் தோன்றி வயது அளவிலே வளர்ந்து = வயதின் அளவுக்கு ஏற்ப செழிப்புடன் வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து = பல நூல்களைப் படித்து உணர்ந்து மதனாலே = (படித்ததின் பயனைப் பெறாமல்) மன்மதனுடைய மலர்க் கணையினால் மயங்கி

கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து
கவலை பெரிதாகி நொந்து மிகவாடி

கரிய குழல் மாதர் தங்கள் = கரு நிறமான கூந்தலை உடைய விலை மாதர்களின் அடி சுவடு மார்(பு) புதைந்து = அடிச் சுவடு மார்பில் புதைய அழுத்தி கவலை பெரிதாகி = மனக் கவலைகள் அதிகமாகி நொந்து மிக வாடி = நொந்து மிகவும் சோர்ந்து

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று
அறு சமய நீதி ஒன்றும் அறியாமல்

அரகர சிவாய என்று = ஹர ஹர சிவாய என்று சொல்லி தினமும் நினையாமல் நின்று = நாள்தோறும் நினையாது நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் = ஆறு சமயங்களின் நீதிகளில் ஒன்றை யேனும் அறிந்து கொள்ளாமல். 

அசனம் இடுவார்கள்  தங்கள் மனைகள் தலை வாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ

அசனம் இடுவார்கள் தங்கள் = சோறு போடுபவர்களுடைய மனைகள் தலை வாசல் நின்று = வீடுகளின் முன் வாயிலில் நின்று அனு தினமும் நாணம் இன்றி அழிவேனோ = நாள் தோறும் வெட்கம் இல்லாமல் அழிந்து போவேனோ?

உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர்
உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே

உரக படம் மேல் = ஆதி சேடனுடைய படத்தின் மீது வளர்ந்த = துயிலும்  பெரிய = பெருமை வாய்ந்த. பெருமாள் அரங்கர் = பெருமாளாகிய அரங்க நாதரும் உலகு அளவு மால் = (மாபலியால் மூவடி கேட்டு) உலகை ஓர் அடியால் அளந்தவருமாகிய திருமால்  மகிழ்ந்த மருகோனே = மனம் மகிழ்ந்த மருகனே.

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க
உறை புகலியூரில் அன்று வருவோனே

உபய குல தீப துங்க = தாயின் குலம் தந்தையின் குலம் என்னும் இரண்டு குலங்களும் விளங்கும் பரிசுத்தமானவரே  விருது கவி ராஜ சிங்க = கொடி, சிவிகை, தாளம் முதலிய விருதுகளை உடைய அருள் கவி ராஜ சிங்கமே  உறை = வசிக்கத் தக்கதான. புகலியூரில் வருவோனே = சீகாழிப் பதியில் (திரு ஞானசம்பந்த மூர்த்தியாக) அவதரித்தவனே.

பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற
பரமன் அருளால் வளர்ந்த குமரேசா

பரவை மனை மீதில் = பரவை நாய்ச்சியார் வீட்டுக்கு அன்று ஒரு பொழுது = அன்றொரு நாள் தூது சென்ற (சுந்தர மூர்த்தி  நாயனாருக்காகத் தூது சென்ற பரமன் = சிவபெருமான் அருளால் வளர்ந்த குமரேசா = திருவருளால் வளர்ந்த குமரேசனே.

பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று
பழநி மலை மீதில் நின்ற பெருமாளே.

பகை அசுரர் சேனை கொன்று = பகைவர்களான அசுரர்களின் சேனைகளைக் கொன்று அழித்து அமரர் சிறை = தேவர்களைச் சிறையினின்று  மீள வென்று = மீளும்படி வெற்றி கொண்டு  பழநி மலை மீதில் நின்ற பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
கருவில் தோன்றி, வயதுக்கு எற்றவாறு வளர்ந்து, பல கலைகளையும் கற்று, மன்மதன் சேட்டையால் அரிய பெண்களின் வலையில் பட்டு, மனம் நொந்து வாடி, அரகர சிவாய என்று உன்னை நாள்தோறும் நினையாமலும், ஆறு சமயங்களின் நெறிகளை அறியாமலும், உணவு கொடுப்போர் மனை வாசல்களில் நின்று வெட்கம் இல்லாமல் அழிந்து போவேனோ?

பாம்பின் மேல் பள்ளி கொள்பவரும், உலகை மூன்று அடிகளால் அளந்தவருமாகிய அரங்கநாதப் பெருமாள் மனம் மகிழ்ந்த மருகனே. சீகாழியில் ஞான சம்பந்தராக அவதரித்தவனே. பரவை நாச்சியாரின் வீட்டில் அன்று சுந்தரருக்காகத் தூது சென்ற சிவ பெருமான் திருவருளால் வளர்ந்த குமரேசனே. அசுரர்கள் சேனைகளை மடிவித்து தேவர்களைச் சிறையிலிருந்து மீளும்படி வென்று, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் விலை மாதர் இன்பத்தில் நாணம் இன்றி அழிவேனோ?

விளக்கக் குறிப்புகள்

அ. அரகர சிவாய வென்று தினமும் .....
(அரகர வென்ன அரியதொன் றில்லை
அரகர வென்ன அறிகிலர் மாந்தர்
அரகர வென்ன அமரரு மாவர்
அரகர வென்ன அறம்பிறப் பன்றே) --------------------------------------------------- திருமந்திரம் .
ஒப்புக:
சிவாயமெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் றருள்தாராய்.................................................. திருப்புகழ் (அவாமரு)
ஆ. அறு சமய நீதி ...
சைவ சமயத்திற்குள் அகச் சமயங்கள் ஆறு:  சைவம், பாசுபதம், மாவிரதம்,
 காளாமுகம், வாமம், வைரவம்.
வைதிக சமயங்கள் ...சைவம் (சிவன் பரம்பொருள்), வைணவம் (திருமால் பரம்
பொருள்), காணாபத்தியம் (கணபதி), கௌமாரம் (முருகன் பரம்பொருள்), சாக்தம்
(சக்தி பரம்பொருள்), சௌரம் (சூரியன் பரம்பொருள்).
இ. உரகபடம் மேல் ...
உரகம் என்பது குண்டலி சக்தி. அதன் மீது பகவான் பள்ளி கொண்டு யோக நித்திரை
 செய்கின்றார். அத்தூக்கமே பேரின்ப நிலையாம்.
தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவ போகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நினைசொல்வ தெவ்வாறே ......................................................... திருமந்திரம்
ஈ. விருது கவி ராஜ சிங்கம் .......
சுப்ரமண்ய மூர்த்தியின் சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளில் ஒன்று,
சம்பந்தராக சீகாழியில் அவதரித்தது.

 உ பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற

சுந்தரருக்காக சிவபெருமான் தூது சென்ற நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது

சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலி நாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம்
திருமணம் செய்தார். சுந்தரர் பூங்கோயிற் பெருமானை வணங்கச்சென்றபொழுது
அவருடைய தோழர்கள் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சுந்தரர்
சங்கிலியாரை மணந்த செய்தியை முன்பே அறிந்த பரவையார் அவர்களைத் தடுத்தார்.
அதனை அவர்களில் சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர்
மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என
உணர்ந்து, ஆலோசித்துக் கற்றறிந்த பெரியார் பலரைப் பரவையார்பால் தூது
விடுத்தார். அவர்களும் சென்று பலவாறு எடுத்துக் கூறியும் பரவையார் சினம்
தணியவில்லை. நிகழ்ந்ததைச் சுந்தரரிடம் கூறினர். சுந்தரர் வருந்தியவாறு இருந்தார்.
நடு யாமம், திருக்கோயிலில் அர்த்தயாம வழிபாடு முடிந்து அனைவரும்
சென்றுறங்கினர். சுந்தரர் மட்டும் உறங்காது சிவபிரானை எண்ணி `என்னை
ஆளுடைய பெருமானே நீரே எழுந்தருளி வந்து பரவையின் பிணக்கைத் தீர்த்தாலன்றி வேறு வழியில்லை` என்று வேண்டினார். அடியார் துயர் தாங்காத  பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்து அழைத்த காரணம் கேட்டார். தன் குறையை எடுத்துக்கூறி `எனக்குத் தாயினு மினிய தோழராயின் என்னுடைய துன்பத்தைப் போக்குவது உன் கடன்` என்று வேண்ட பெருமானும், `கவலைப்படேல், இப் போதே பரவைபால் தூது சென்று வருகின்றோம் என்று கூறினார்.
திருவாரூர்த் திருவீதியில் மண்ணில் திருவடிகள் தேய, சிவ வேதியர் வேடம்
தரித்து திருவீதி வழியே தூது சென்றார். பரவையார் மாளிகையை அடைந்தார். `பரவையே கதவைத் திற என்றழைத்தார். பரவையாரும் பதை பதைப்புடன் கதவைத் திறந்தார். வந்த காரணம் வினவிய பரவையாரை நோக்கிச் சிவ வேதியர், `மறுக்காது ஏற்பதாயின் சொல்வேன் என்றனர். `எனக்கு இசைவதேயாகில் இணங்குவேன் என்றார் பரவையார். `சுந்தரர் இங்கு வரவேண்டுவதே தாம் வந்த காரணம் என்று சிவவேதியர் கூறப் பரவையார் `திருவொற்றியூரில் சங்கிலியை மணந்த அவர்க்கு இங்கு ஒரு சார்புண்டோ? உமது பெருமைக்கு இத்தூது ஏற்றதன்று. நான் அதற்கு இசையேன் என்று மறுத்துக் கூறினார். பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். வெற்றியுடன் வருவார் என்று எதிர்பார்த்திருந்த சுந்தரரை
அணுகினார் பெருமான்.

பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்து விட்டாள் என்று கூறினார். நீர் வேடம் தரித்து போகலமா உங்கள் சுய ரூபத்தில் போய் சொன்னால்தான் பரவையர் கேட்பார் என சொல்ல  சிவபிரான் நம்பி யாரூரரை அருளோடு பார்த்து, `நாம் மீண்டும் ஒருமுறை தூது சென்று உன்குறை
முடிப்போம் துயரொழிக என்றருளிச் செய்து பரவையார் மாளிகையை நோக்கி
மீண்டும் எழுந்தருளினார்

இப்பொழுது சிவபெருமான் தன் உண்மைத் திருக்கோலத்தோடு பரவையார்
மாளிகையை அடைந்தார். பரவையார் மகிழ்ச்சி பொங்க இறைவன் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கி நின்றார். பெருமான் `பரவையே! நம்பியாரூரன் ஏவ மீண்டும்
உன்பால் வந்தோம்; மறுக்காதபடிச் சுந்தரனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூற, பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்துழலும் பெருமானின் கருணையை வியந்து, `இசைவு படாது என் செய்ய வல்லேன் என்றார். பெருமான், `நல்லுரை பகர்ந்தாய் என்று கூறிப் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரை வீடு சேர்ப்பித்தார்

பரவைக்கு எத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் ................... திருப்புகழ் 395. பரவைக்கெத்தனை

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published