போத கந்தரு கோவேந மோநம
நீதி
தங்கிய தேவாந மோநம
பூத
லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும்
பூணு கின்றபி ரானேந மோநம
வேடர் தங்கொடி மாலாந மோநம
போத வன்புகழ் ஸாமீந மோநம அரிதான
வேத மந்திர ரூபாந மோநம
ஞான பண்டித நாதாந மோநம
வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான
மேனி தங்கிய வேளேந மோநம
வான பைந்தொடி வாழ்வேந மோநம
வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலேபொ ராடிய
பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே
பாதி சந்திர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார
திண்புய மேசேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதாம நோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆவல் கொண்டுவி றாலேசி ராடவே
கோம ளம்பல சூழ்கோயில் மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
-85 பழநி
பதம் பிரித்து
உரை
போதகம் தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூதல தனை ஆள்வாய் நமோநம பணி யாவும்
போதகம் தரு கோவே
= ஞான உபதேசத்தைத் தந்த தலைவனே நமோநம = உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். நீதி தங்கிய தேவா = நீதிக்கு இருப்பிடமாகும் தேவனே நமோநம = ....... பூதலந்தனை = பூ மண்டலத்தை ஆள்வாய் = ஆள்பவனே நமோநம =
...... பணி யாவும் = அணிகலன்களை எல்லாம்.
பூணுகின்ற பிரானே நமோநம
வேடர் தம் கொடி மாலா நமோநம
போதவன் புகழ் ஸாமி நமோநம அரிதான
பூணுகின்ற பிரானே = அணிகின்ற பெருமானே நமோநம =
....... வேடர் தம் கொடி = வேடர்களின் மகளாகிய வள்ளியிடம் மாலா = ஆசை பூண்டவனே
நமோநம =.... போதவன்= (தாமரை) மலரில் வீற்றிருக்கும் பிரமன் புகழ் ஸ்வாமி = புகழ்கின்ற சாமியே நமோநம = ..... அரிதான = அருமையான.
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டை கொள் தாளா நமோநம அழகான
வேத மந்திர ரூபா
= வேத மந்திரங்களின் வடிவம் கொண்ட வனே நமோநம = ....... ஞான பண்டித நாதா = ஞானப் புலமை வாய்ந்த நாதனே நமோநம = ...... வீர கண்டை = வீரக் கழலை கொள் தாளா = அணிந்துள்ள திருவடியை உடையவனே நமோநம = ...... அழகான = அழகிய.
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்ட விசாகா நமோநம அருள் தாராய்
மேனி தங்கிய வேளே
= திருமேனி விளங்கும் தலைவனே நமோநம = ...... வான பைந்தொடி வாழ்வே = தேவருலகில் வளர்ந்த அழகிய தோள்வளை அணிந்த தேவசேனைக்கு நாயகனே நமோநம =
....... வீறு கொண்ட விசாகா = வெற்றிப் பொலிவு
கொண்ட விசாகனே நமோநம = ..... அருள் தாராய் = அருள் தருவாயாக.
பாதகம் செறி சூராதி மாளவே
கூர்மை கொண்ட அயிலாலே போராடியே
பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே
பாதகம் செறி = பாதகச் செயல்கள் நிறைந்த சூராதி = சூரன் முதலியோர் மாளவே = இறந்து போகும்படி கூர்மை கொண்ட=
கூரிய அயிலாலே = வேலாயுதத்தால் போராடியே = சண்டை செய்து பார அண்டர்கள்
= பெருமை பொருந்திய தேவர்கள் வான் நாடு சேர்தர = விண்ணுலகதுக்குக் குடி போக அருள்வோனே = அருள் புரிந்தவனே.
பாதி சந்திரனே சூடிம் வேணியர்
சூல சங்கரனார் கீத நாயகர்
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர்
பாதி சந்திரனே
= பிறைச் சந்திரனை சூடும் வேணியர் = சூடிய சடையினர் சூல சங்கரனார் = சூலப் படை ஏந்திய சங்கரனார் கீத நாயகர் = இசைத் தலைவர்பார திண் புயமே சேரு= கனத்த திண்ணிய புயங்களைக் கொண்ட சோதியர் = ஒளியினர் கயிலாயர் = கயிலை மலையில் உறைபவர்.
ஆதி சங்கரனார் பாக மாது உமை
கோல அம்பிகை மாதா மநோ மணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆதி சங்கரனார் = ஆதி சங்கரன் என்ற சிவபெருமானுடைய { சம்- சுகம், கரன் – செய்பவன் சங்கரன் – சுகத்தை செய்பவன்} பாக மாது உமை
= (இடப்) பாகத்தில் உறையும் பார்வதி, உமை அம்மை கோல = அழகிய அம்பிகை = அம்பிகை மாதா = தாய் மநோமணி = மனோன்மணி ஆயி = அன்னை சுந்தரி = சுந்தரி தாயான நாரணி =
(உயிர்களுக்குத்) தாயான நாரணி அபிராமி = அழகி (ஆகிய) பார்வதி தேவி.
ஆவல் கொண்டு வீறாலே சீராடவே
கோமளம் பல சூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
ஆவல் கொண்டு = ஆசை பூண்டு. வீறாலே = பெருமையுடன். சீராடவே = சீராட்ட. கோமளம் பல் சூழ்
= அழகு பல கொண்ட. கோயில் சூழ் மீறி = திருக்கோயில் சிறந்து விளங்கும். ஆவினன்குடி = திருவாவினன்குடியில். வாழ்வான = வாழ்வு கொண்டிருக்கும். தேவர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.
சுருக்க உரை
ஞான உபதேசம் தந்தவரே, நீதிக்கு உறைவிடமே, மூவுலகை ஆள்பவரே, பல அணிகலன்களை அணிபவரே, வேடப் பெண் வள்ளியிடம்
ஆசை கொண்டவரே, பிரமன் புகழும் சாமியே, வேத
வடிவினரே, ஞான பண்டிதா. வீரக் கழல் அணிந்த திருவடியை உடையவரே.
அழகனே. தேவசேனையின் கணவனே, வெற்றியுடன் விளங்குபவரே, உம்மை நான் மீண்டும் மீண்டும் வணங்குகின்றேன்.
பாதாகம் நிறைந்த சூரர் குலத்தை வேலால் அழித்துத் தேவர்கள் தம் ஊருக்குக் குடி புக
அருள் புரிந்தவரே, நிலவைச் சடையில் தரித்தவரும், சூலம் ஏந்தியவருமாகிய
ஆதி சங்கரனின் இடப் பாகத்தில் உறையும் உமா தேவி, அழகி, அம்பிகை, மாதா, சுந்தரி, ஆகிய
பார்வதி ஆசையோடு உன்னைச் சீராட்ட, பல கோயில்கள் கொண்ட பழனியில் வீற்றிருக்கும் தேவர்கள்
பெருமாளே, உம்மை வணங்குகின்றேன். அருள் புரிவாயாக.
சில குறிப்புகள்
- இது ஒரு துதிப் பாடல். நாத விந்து கலாதி எனத் தொடங்கும்
பாடலை ஒத்தது.
- திருவிவாவினன்குடி
கோயில் மலை அடிவாரத்திலும், பழநியாண்டவர் கோயில் மலையிலும் இருக்கின்றன. பழனி
என்னும் ஊர் சிவகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படும்.
Meaning and explanations provided by
Dr.
C.R. Krishnamurti, Professor Emeritus,
University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by
Shantha and Sundararajan

No comments:
Post a Comment
Your comments needs approval before being published