F

படிப்போர்

Monday, 3 September 2012

33.துன்பங் கொண்டு

துன்பங்கொண்  டங்க மெலிந்தற  
         நொந்தன்பும் பண்பு மறந்தொளி
         துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி               லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
         கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
         யென்றென்றுந் தொண்டு செயும்படி       யருள்வாயே
நின்பங்ககொன் றுங்குற மின்சர
         ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
         நின்றன்பின் றன்படி கும்பிடு                   மிளையோனே     
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
         குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
         பம்புந்தென் செந்திலில் வந்தருள்             பெருமாளே.
-       திருச்செந்தூர்
பதம் பிரித்து பதவுரை

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற 
நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே

துன்பம் கொண்டு = துன்பத்தை அடைந்து அங்கம் அற மெலிந்து = உடன் முழுதும் மெலிந்து நொந்து = வருந்தி அன்பும் பண்பும் மறந்து = அன்பையும் நற்குணங்களையும் மறந்து ஒளி துஞ்சும் = (உடல்) ஒளி குறைந்து போகும்படி பெண் சஞ்சலம் என்பதில் = பெண் மயக்கம் என்பதில் அணுகாதே = நான் சிக்கிக் கொள்ளாமல்.

இன்பம் தந்து உம்பர் தொழும் பத
கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி
என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே

இன்பம் தந்து = கொடுத்து உம்பர் தொழும் = தேவர்கள் தொழுகின்ற பத கஞ்சம் = (உனது) தாமரைத் திருவடிகளை  தம்
தஞ்சம் எனும்படி = நமது புகலிடம் என்னும்படியாக என்றென்றும் = எப்போதும் தொண்டு செய்யும்படி = (உனக்குத்) தொண்டு செய்யுமாறு  அருள்வாயே = அருள் செய்வாயாக.

நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம்
கண்டு தஞ்சம் எனும்படி 
நின்று அன்பின்தன் படி கும்பிடும் இளையோனே

நின் பங்கு ஒன்றும் = உன் பக்கத்தில் பொருந்தி நிற்கும் குற மின் = குறக் குலத்தைச் சேர்ந்த மின்னலைப் போன்ற வள்ளியின் சரணம் கண்டு = திருவடிகளைப் பார்த்து தஞ்சம் எனும் படி= (இதுவே எனக்குப்) புகலிடம் என்று விளங்கும்படி நின்று = நின்று அன்பின்தன் படி = அன்பின் முறைப்படி கும்பிடும் = கும்பிட்ட  இளையோனே = இளையவனே.

பைம் பொன் சிந்தின் துறை தங்கிய 
குன்று எங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே.

பைம் பொன் = பசுமைப் பொலிவுள்ள சிந்தின் துறை தங்கிய = கடற்கரையில் உள்ள குன்று எங்கும் = குன்றுகளிலெல்லாம்   
வலம்புரி சங்கு = வலம்புரிசங்கு பம்பும் = நிறைந்து கிடக்கும் தென் = அழகிய செந்திலில் = திருச்செந்தூரில் வந்து அருள் பெருமாளே = எழுந்தருளியுள்ள பெருமாளே.

சுருக்க உரை

துயரம் கொண்டு, உடல் மெலிந்து, வருந்தி, அன்பையும் நற் குணங்களையும் மறந்து, தேக ஒளி குன்றுமாறு செய்யும் பெண் மயக்கம் என்பதில் நான் சிக்கிக் கொள்ளாமல், இன்பம் கொடுத்துத் தேவர்களும் தொழும் உனது திருவடியே சரணம் எனக் கொண்டு, உனக்கு எப்பொழுதும் தொண்டு செய்ய அருள் புரிவாயாக.

உன் பக்கத்தில் உறையும் குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவடியைக் கண்டு, இதுவே எனக்குப் புகலிடம் என்னும்படி முறையாகக் கும்பிட்ட இளையவனே. பொலிவான கடற் கரையில் வலம்புரி சங்குகள் நிரம்பக் கிடக்கும் அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே. உனக்குத் தொண்டு செய்ய அருள் புரிய வேண்டுகிறேன்.

விளக்கக் குறிப்புகள்

அ. திருச்செந்தூர் கடற் கரையில் முத்து வீசும் குறிப்பை மற்ற பாடல்களிலும்     காணலாம்.
 (சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு)...கந்தர் அந்தாதி    (ஒரு கோடி முத்தந் தெள்ளக் கொழிக்குங் கடற் செந்தின் மேவிய)...கந்தர்    அலங்காரம்

ஆ. குற மின் சர ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி....கும்பிடும்....    (வள்ளி பதம்பணியும் தணியா
 அதிமோக தயாபரனே)..கந்தர் அனுபூதி .

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published