கறைபடுமு டம்பி ராதெனக் 
        கருதுதலொ ழிந்து வாயுவைக் 
        கருமவச னங்க ளால்மறித்                    தனலூதிக் 
கவலைபடு கின்ற யோககற் 
        பனைமருவு சிந்தை போய்விடக் 
        கலகமிடு மஞ்சும் வேரறச்               செயல்மாளக் 
குறைவறநி றைந்த மோனநிர்க் 
        குணமதுபொ ருந்தி வீடுறக் 
        குருமலைவி ளங்கு ஞானசற்                  குருநாதா 
குமரசர ணென்று கூதளப் 
        புதுமலர்சொ ரிந்து கோமளப் 
        பதயுகள புண்ட ரீகமுற்                றுணர்வேனோ 
சிறைதளைவி ளங்கு பேர்முடிப் 
        புயலுடன டங்க வேபிழைத் 
        திமையவர்கள் தங்க ளூர்புகச்                 சமராடித் 
திமிரமிகு சிந்து வாய்விடச் 
        சிகரிகளும் வெந்து நீறெழத் 
        திகிரிகொள நந்த சூடிகைத்                  திருமாலும் 
பிறைமவுலி மைந்த கோவெனப் 
        பிரமனைமு னிந்து காவலிட் 
        டொருநொடியில் மண்டு சூரனைப்     பொருதேறிப் 
பெருகுமத கும்ப லாளிதக் 
        கரியெனப்ர சண்ட வாரணப் 
        பிடிதனைம ணந்த சேவகப்               பெருமாளே. 
-101 சுவாமிமலை
பதம் பிரித்து உரை
கறை படும் உடம்பு இராது என 
கருதுதல் ஒழிந்து வாயுவை 
கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி 
கறை படு முடம்பி = குற்றங்களுக்கு இடமான உடல் இராது என = நிலைத்து நிற்காது என்று கருதுதல் ஒழிந்து = எண்ணுதலை விட்டு வாயுவை = (அவ்வுடல் நிலைத்து நிற்கும்படி செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை கரும வசனங்களால் மறித்து = தொழில் மந்திரங்களால் தடை செய்து அனல் ஊதி = மூலாக்கினியை எழுப்பி. 
கவலை படுகின்ற யோக கற்பனை 
மருவு சிந்தை போய் விட 
கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள 
கவலை படுகின்ற = கவலைக்கு இடம் தருகின்ற. யோக கற்பனை மருவு சிந்தை = யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணுகின்ற சிந்தனைகள் போய்விட = தொலையவும். கலகம் இடும் = கலக்கத்தைத் தரும் அஞ்சும் = ஐம்புலன்களும் வேர் அற = ஒடங்கி வேரற்றுப் போகவும் செயல் மாள = என் செயல்கள் எல்லாம் ஓய்வற்று அழியவும். 
குறைவு அற நிறைந்த மோன நிர் 
குணம் அது பொருந்தி வீடு உற 
குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா 
குறைவு அற நிறைந்த = குறைவின்றி நிறைந்ததான. மோன = மவுன நிலையை நிர்க்குணம் அது பொருந்தி = குணங்கள் அற்ற நிலையை நான் அடைந்து. வீடு உற = வீட்டின்பத்தை அடைந்து. குரு மலை விளங்கும் = சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதா = ஞான சற் குரு நாதனே. 
குமர சரண் என்று கூதள 
புது மலர் சொரிந்து கோமள 
பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ 
குமர சரண் என்று = குமரனே, சரணம் என்று கூதளப் புது மலர் = கூதளச் செடியின் புது மலரை சொரிந்து = சொரிந்து கோமள = (உனது) அழகிய பத யுகளம் புண்டரீகம் = இரண்டு திருவடித் தாமரைகளை உற்று = சார்ந்து (சிந்தித்து) உணர்வேனோ = உன்னை உணர்வேனோ?
சிறை தளை விளங்கும் பேர் முடி 
புயல் உடன் அடங்கவே பிழைத்து 
இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி 
சிறை தளை விளங்கும்=சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கிய பேர் = பேர்களான தேவர்கள் முடிப் புயல் உடன் = இந்திரன் முதலான யாவரும். அடங்கவே பிழைத்து = பிழைக்கவும். இமைய வர்கள் = தேவர்கள் தங்கள் ஊர் புக = தங்கள் ஊராகிய பொன் னுலகில் குடி போகவும் சமர் ஆட = போரைப் புரிந்து. 
திமிர மிகு சிந்து வாய் விட 
சிகரிகளும் வெந்து நீர் எழ 
திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் 
திமிரம் மிகு = கரு நிறம் கொண்ட, இருள் மிகுந்த சிந்து = கடல் வாய் விட = ஓலம் இட சிகரிகளும் வெந்து = மலைகள் வெந்து நீர் எழ = பொடியாக திகிரி கொள் = சக்கராயுதத்தை ஏந்திய வரும் அனந்தம் = பொன் சூடிகைத் திருமாலும் = முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும் ( அனந்தசுடிகை – ஆதி சேடன் முடியில் விளங்குபவராகிய திருமாலும். 
பிறை மவுலி மைந்த கோ என 
பிரமனை முனிந்து காவல் இட்டு 
ஒரு நொடியில் மண்டு சூரனை பொருதேறி 
பிறை மவுலி = பிறைச் சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானின். மைந்த = மைந்தனே கோ என = (சூரனை அழித்தருளுக என்று துக்கத்துடன்) இரங்கி வேண்ட. பிரமனை முனிந்து = பிரமனைக் கோபித்து காவல் இட்டு = சிறையிட்டு ஒரு நொடியில் = ஒரு நொடிப் பொழுதில். மண்டு = நெருங்கி (எதிர்த்த சூரனுடன்) பொருதேறி = சண்டை செய்து வென்று. 
பெருகு மத கும்ப லாளிதம் 
கரி என ப்ரண்ட வாரண 
பிடி தனை மணந்த சேவக பெருமாளே. 
பெருகு = பெருகி வருகின்ற மத கும்பம் = மத நீருள்ள மத்தகத் தையும் லாளிதம் = அழகையும் கரி என= (கொண்ட) யானை எனப்படும் ப்ரண்ட வாரணப் பிடிதனை= வலிமையான  ஐராவதம் என்னும் வெள்ளை யானையால் போற்றி வளர்க்கப்பட்ட தேவ சேனையை மணந்த சேவகப் பெருமாளே = மணம் புரிந்த வீரப் பெருமாளே 
சுருக்க உரை 
நிலையற்ற உடம்பை நிலைபெறச் செய்ய விரும்பி, உள் இழுக்கும் வாயுவைப் பல மந்திரங்களால் தடை செய்து, மூலாக்கினியை எழுப்பி, யோக மார்க்கங்கள் செய்யும் சிந்தனையை அகற்றி, நான் ஐம்புலன்களை அடக்கி, மவுனம் பூண்டு, செயல்கள் அற, உய்வு பெற, சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞான குரு நாதனே. உன் தாமரைத் திருவடிகளில் சரணம் அடைந்து, சிந்தையை நிறுத்தி, உன்னைச் சிந்தித்து உணர்வேனோ? தேவர்களும் இந்திரனும் பொன்னுலகில் புக, சூரனுடன் போர் புரிந்து, திருமாலும், சிவ பெருமானும் இரங்கி வேண்ட, ஆணவத்துடன் நின்ற பிரமனைச் சிறையில் இட்டு, சூரனுடன் போரிட்ட, தேவ சேனையின் கணவனே, உன் திருவடித் தாமரைகளை நான் அடைவேனோ. 
ஒப்புக 
| 
திருவடியை உணர வேண்டுதல் | 
யோக கற்பனை மருவு சிந்தை.... 
அசட்டு யோகத்தை அருணகிரியார் பல இடங்களில் கண்டிக்கிறார். 
காட்டிற் குறத்தி பிரான் பதத்தேகருத்தைப் புகட்டின் 
வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி விழிவைத்து 
மூட்டிக் கபாலிமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே 
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே       ---                  கந்தர் அலங்காரம்  
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச 
அசட்டு யோகி யாகாமல் மலமாயை                               ---                 திருப்புகழ், அனித்தமான 
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல் 
அவனி மீதி லோயாது தடுமாறும்                               ----                     திருப்புகழ், அடைபடாது 

No comments:
Post a Comment
Your comments needs approval before being published