செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க
வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த
குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே
-106 திருவேரகம்
பதம் பிரித்தல்
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி
செக மாயை உற்று= உலக மாயையில் உற்று என் அக வாழ்வில் வைத்த = என் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட. திரு மாது = அழகிய மனையாளின். கெர்ப்பம் உடல் ஊறி = கர்ப்பத்தில் உடலில் ஊறி.
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
தெச மாதம்
முற்றி = பத்து மாதம் நிறைய வடிவாய் = வடிவுடன் நிலத்தில் = பூமியில் திரமாய்
அளித்த = நன்கு தோன்றிய பொருளாகி= பொருளாகி (என் மனைவி வயிற்றில் பிறந்த குழந்தை போல நீ தோன்றி).
மக அவாவின் உச்சி விழி ஆனனத்தில்
மலை நேர் புயத்தில் உறவாடி
மக அவாவின் = (நான் உன்னை) மிகவும் ஆசைப் பெருக்குடன் உச்சி = உச்சி மோந்தும். விழி = கண்ணில் ஒற்றியும்
ஆனனத்தில் = முகமோடு முகம் வைத்தும் (களிப்புற்றும்) மலை நேர் புயத்தில் உறவாடி = மலை போன்ற புயங்களில் நீ உறவாடி.
மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணி வாயில் முத்தி தர வேணும்
மடி மீது
அடுத்து = (என்) மடி மீது சேர்ந்து விளையாடி = விளையாடி நித்தம் = நாள் தோறும் மணி வாயில் = உனது அழகிய திருவாயால். முத்தி தர வேணும் = முத்தம் அளித்தருள வேண்டும்.
முக மாயம் இட்ட குற மாதினுக்கு
முலை மேல் அணைக்க வரும் நீதா
முக மாயம் இட்ட
= முக வசீகரம் கொண்ட குற மாதினுக்கு = குறப் பெண்ணாகிய வள்ளியின் முலை மேல் அணைக்க வரும் = கொங்கையை அணைய வந்த நீதா = நீதிமானே.
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள்
மொழியே உரைத்த குரு நாதா
முது மா
மறைக்கு = பழைய சிறந்த வேதத்தில். ஒரு = ஒப்பற்ற. பொருட்கு உள் = பெரும் பொருள்களுக்கு உள்ளே இருக்கும். மொழியை = (பிரணவப்) பொருளை. உரைத்த குரு நாதா = (சிவபெருமானுக்கு) விளக்கிய குரு நாதரே.
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே
தகையாது = தடை ஒன்றுமில்லாமல் எனக்கு உன் அடி காண வைத்த = அடியேனுக்கு உன் திருவடி தரிசனத்தைத் தந்த. தனி = ஒப்பற்ற ஏரகத்தின்
முருகோனே = திருவேர கத் தலத்து முருகனே.
தரு காவிரிக்கு வட பாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே.
தரு = (அகத்தியர் கமண்டலம்) தந்த காவிரிக்கு = காவிரி ஆற்றுக்கு வடபாரிசத்தில் = வடக்குப் பக்கத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே = போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
சுருக்க உரை
உலக
மாயையில் உற்று,
என் மனைவியின் கர்ப்த்தில் ஊறி, பத்து மாதங்கள் நிறைந்தவுடன், குழந்தையாகத் தோன்றி,
நான் உன்னை
உச்சி
மோந்து,
கண்களில் ஒற்றி, முகமோடு முகம் வைத்துக் களிக்கும்படி, என் புயங்களில் நீ உறவாடி, உனது
திருவாயால் முத்தம் அளித்து அருள வேண்டும்.
முக
வசீகரம் கொண்ட வள்ளியை அணைந்த நீதிமானே. ஒப்பற்ற வேதங்களின் உட் பொருளைச்
சிவபெருமானுக்கு உரைத்தவரே. தடையொன்றும் இன்றி, அடியேனுக்கு உன் திருவடி தரிசனத்தைத் தந்த திருவேரகத்தின் முருகனே. காவரியின்
வட பாகத்தில் போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே. மணி வாயில் முத்தி தர வேண்டும்.
விளக்கக் குறிப்புகள்
1.மக அவாவின் உச்சி விழி ஆனனத்தில்....
பரம் பொருளைக் குழந்தையாகப் பாவித்து அதன் மீதுள்ள காதலைத்
தெரிவிக்கின்ற பாடல்கள் பிள்ளைத் தமிழ் என்னும் நூல் எனப்படும்.
2. உள் மொழியே உரைத்த குருநாதா....
இதனால் திருவேரகம் சுவாமி மலை அல்லது குரு மலை எனப்படும்.
முருக வேள் தகப்பன் சாமி ஆயினர்.
ஒப்புக:
சதைக்கும் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
தகப்பன் சாமி யெனவரு பெருமாளே. .. திருப்புகழ்,
புவிக்குன்பாத.
3 தகையாது எனக்கு உன் அடி காண வைத்த – உன் அடி எனக்குறிப்பிடுவது
குராமரத்தடியில் உள்ள யோகநிலை காட்சியாகும். ஸ்தலம் திருவிடைக்கழி

No comments:
Post a Comment
Your comments needs approval before being published