F

படிப்போர்

Friday, 28 September 2012

105.சுத்தியநரப்புடன்

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
       டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
       சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர்                        சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
       குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
       துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக                            வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
        லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
       எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில்                               பஞ்சபூதம்
எத்தனைகு லுக்ககையுமி னுக்கையும னக்கவலை
       யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
       எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில்                      மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை                                                             
       யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
       சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள                      மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
       கைத்தலம்வி ரித்தரஹு ரச்சிவபி ழைத்தொமென
       சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட                              வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலமவி தித்துடன
        ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
       சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட                                 னங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
       றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
        சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ்                               தம்பிரானே.
-       105 திருவேரகம்

பதம் பிரித்தல்

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு
அப்பு நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை

சுத்திய = சுற்றப்பட்டுள்ள நரப்புடன் எலுப்பு = நரம்பு களுடன் எலும்பு பொருந்திய. தசைக் குடலொடு = மாமிசம், குடல் அப்பு = நீர் நிணம் = கொழுப்பு சளி = (மூக்குச்) சளி வலிப்புடன் = இழுப்பு நோய் இரத்த குகை = இருதயம் சுக்கிலம் = இந்திரியம் விளைப் புழுவொடு =விளைகின்ற கிருமிகள் அக்கையும் = எலும்புகள் அழுக்கும் = அழுக்குகள் மயிர் = உரோமம். சங்கு மூளை = சங்கு போல் வெளுத்த மூளை.

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு
குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி
துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக அங்கம் ஊடே

துக்கம் விளைவித்த பிணை = துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய். அல் கறை = மாதவிடாய் முதலிய மாசு முனைப் பெருகு குட்டமொடு = அவயவ நுனிகளில் விருத்தியாகும் குட்ட நோய் விப்புருதி = சிலந்தி. புற்றெழுதல் = புண் புரை வைத்தல். முட்டு வலி = மூட்டு வலி. துச்சி பிளவை = புசிக்கின்ற ராஜப் புண் பொருமல் = வயிறு உப்பும் நோய் பித்தமொடு = பித்தம் உறக்கம் மிக = தூக்கம் மிகுந்து வர. அங்கமூடே = உடலில்.

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கம் உறல்
எத்தனை சலிப்பொடு கலிப்பையும் இடற் பெருமை
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்ச பூதம்

எத்தனை நினைப்பையும், விளைப்பையும் = எத்தனை எண்ணங்கள், செய்கைகள் மயக்கம் உறல் = மயக்கங்கள். எத்தனை சலிப்பொடு= எத்தனை வெறுப்பும் கலிப்பையும் = பொலிவு மிடற் பெருமை = வலிமைப் பெருமை எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த = எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள பஞ்ச பூதம் குடில் = ஐந்து பூதத்தாலாகிய உடலில்.

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை
எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்கேவேனோ

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் = எத்தனை குலக்கு, எத்தனை மினுக்கு மனக் கவலை = மனக் கவலை. எத்தனை கவட்டையும் = எத்தனை கபடம். நடக்கையும் = நடவடிக்கை உயிர்க் குழுமல் = உயிரின் சேர்க்கை எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து = எத்தனை பிறவிகளையும், மரணங் களையும் எடுத்து உலகில் மங்குவேனோ =(நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ?

தத்தனத ..........என திமிலை
ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள்
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெ(ள்)ள மண்டி ஓட

தத்தனத....என திமிலை = இவ்வாறு பறைகள் ஒலிக்க ஒத்த முரசம் = ஒரு வகைப் பறை. துடி = உடுக்கை இடக் கை முழவுப் பறைகள் = இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள். சத்தம் அறைய = பேரொலி செய்யவும் தொகுதி = கூட்டமாய் வருவதை ஒத்த = வருவதை ஒத்து செனித்த = தோன்றிய. இரத்த வெள = இரத்த வெள்ளம். மண்டி ஓட = நெருங்கி ஓட.

சக்கிரி நௌiப்ப அவுண பிணம் மிதப்ப அமரர்
கை தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா

சக்கிரி = ஆதிசேடனாகிய பாம்பு. நெளிப்ப = நெளிய. அவுணப் பிணம் = அசுர பிணங்கள். மிதப்ப = (இரத்த வெள்ளத்தில்) மிதக்க. அமரர் = தேவர்கள். கைத் தலம் விரித்து = கைகளைத் தூக்கி. அரஹர = அரகர. சிவ = சிவ. பிழைத்தோம் என= பிழைத்தோம் என்று முழங்க. சக்கிர கிரிச் சுவர்கள் = சக்ரவாளகிரியின் சுவர்கள். அக்கணமே பக்கு விட = அந்தக் கணத்திலேயே பிளவுபட. வென்ற வேலா = வென்ற வேலனே.

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன்
அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர்
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே

சித்தம் அதில் = உனது திருவுள்ளத்தில் எத்தனை செகத் தலம் விதித்து = எத்தனை உலகங்களைப் படைத்து. உடன் அழித்து = உடனே அழித்து. கமலத்தனை = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை. மணிக் குடுமி பற்றி = அழகிய குடுமியைப் பிடித்து. மலர் சித்திர கரத் தலம் = (உனது) அழகிய திருக்கரம். வலிப்ப = வருந்த. பல குட்டி நடனம் கொள்வேளே = பல முறை அவனைக் குட்டி நடனம் கொண்டவனே.

செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு
குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை
சிற் பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே.

செட்டி வடிவைக் கொடு = செட்டி வேடம் பூண்டு. தினைப் புனமதில் = தினைப் புனத்தில் (வாழும்) சிறுகு = சிறிய. குறப் பெண் அமளிக்குள் = குறப் பெண்ணாகிய வள்ளியின் படுக்கையில் மகிழ் செட்டி = மகிழும் செட்டியே குரு வெற்பில் உறை = சுவாமி மலையில் வீற்றிருக்கும். சிற் பரமருக்கு = ஞானமயமான சிவ பெருமானுக்கு ஒரு குருக்கள் என = ஒப்பற்ற குருமூர்த்தி என்று முத்தர் புகழ் = முத்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே = தம்பிரானே.

சுருக்க உரை

நரம்பு, எலும்பு, ஊன், குடல், நீர், சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம், புழுக்கள், அழுக்குகள், மயிர், மூளை, மற்றும் பல நோய்கள் மிகுந்துள்ள உடலில் தான் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், வெறுப்புகள், பொலிவுகள், நோய்கள்? ஐந்து பூதங்களால் ஆகிய இந்தக் குடிலில் எத்தனை குலுக்கு, மினுக்கு, நடவடிக்கை, பிறவிகள், இறப்புகள்? இவைகளை நான் மீண்டும் மீண்டும் எடுத்து நான் உலகில் வாட்டமுற்று அழிவேனோ?

பேரொலியுடன் பல வாத்தியங்கள் முழங்குவதை ஒத்து ஓடும் அசுரர்களின் இரத்தம் நிரம்பி ஓட, ஆதிசேடன் நௌi, தேவர்கள் அரகர என்று கைகளைத் தூக்கி முழங்க, சக்ரவாள கிரி பிளவுபட, வென்ற வேலா. நினைத்த மாத்திரத்தில் எத்தனை உலகங்களைப் படைக்கவும், உடனே அழிக்கவும் வல்லவனே. பிரமனது குடுமியைப் பிடித்துக் குட்டி நடனம் புரிபவனே. செட்டி வேடம் பூண்டு வள்ளியுடன் மகிழும் பெருமாளே. சிவபெருமானுக்குக் குரு மூர்த்தியாக நின்று புகழ் பெற்ற தம்பிரானே.
நான் பிறப்பையும், இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ?

ஒப்புக

1.சித்தமதி லெத்தனை செகத்தலம் விதத்துடன்.....
 பிரமனைச் சிறையிலிட்டு முருகவேள் தாமே படைப்புத் தொழிலை   நடத்தினர். கந்தமால் வரைதனில் ஏகிப் பல்லுயிர்த் தொகை படைப்பது
நினைத்தனன் பரிவால்....ஆதியாய் வைகிய செவ்வேளா அயனெனப்
படைக்கின்றதும் அற்புதம் ஆமோ        ...                                               கந்த புராணம்
2.செட்டி வடிவைக் கொடு தினைப் புனத்திற் சிறுகுறப் பெண்.....
காதலால் கடல் சூர் தடிந்திட்ட
    செட்டி அப்பனை பட்டனை செல்வ
    ஆரூரானை மறக்கலும் ஆமோ         ..                                                   சுந்தரர் தேவாரம்
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published