F

படிப்போர்

Thursday, 13 September 2012

70.குருதி மல சலம்குருதி மல சலம் ஒழுகு நர குடல்
அரிய புழு அது நெளியும் உடல் மத
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே

குருதி = இரத்தம் மல சலம் = தண்ணீருடன் சேர்ந்த மலம் இவை ஒழுகு = ஒழுகும் நர குடல் = மனிதக் குடலையும் அரிய = சிறிய புழு அது நெளியும் = புழுக்கள் நெளியும் உடல் = உடலையும் கொண்டு மத குருபி = மதமும் விகார வடிவும் உடைய  நிணம் = கொழுப்பு  தசை விளையும் = சதை ஊறி எழும்  உளை சளி = சேறு போன்ற சளி இவையெல்லாம்  உடலூடே = உடலினுள்ளே.

குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு
குமர வலி தலை வயிறு வலி என
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி

குடிகள் என பல குடிகை கொடு = குடியிருப்பவர் போலப் பலவும் குடி கொண்டு  வலி கொடு = பலமான  குமர வலி = குமர கண்டம் என்ற வலிப்பு வலி  தலை வயிறு வலி = தலை  வயிற்று வலி  என = என்று பெயர் கொண்டு  கொடுமை என = கொடுமை என்று சொல்லும்படி  பிணி கலகம் இடும் இதை = நோய்கள் ஒன்றுடன் ஒன்று கலகம் புரிகின்ற இந்த உடலை  அடல் பேணி = வலிமையாக விரும்பிய நான்.

மருவி மதனன் உள் கரிய புளகிதம்
மணி அசல பல கவடி மலர் புனை
மதன கலை கொடு குவடு மலை தனில் மயல் ஆகா

*********
மனது துயர் அற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதம் உற எனது தலை பதம் அருள்வாயே

மனது துயர் அற = (எனது) மனதில் உள்ள துன்பம் ஒழியுமாறு வினைகள் சிதறிட = வினைகள் சிதறுண்டு போக மதன பிணியொடு = காம நோயும்  கலைகள் சிதறிட = (நான் கற்ற) காம நூல்கள் விலகி நீங்கவும்  உனது பதம் உற = என் மனம் பக்குவ நிலையை அடைய  எனது தலை = என்னுடைய தலையில்  பதம் அருள்வாயே = உன் திருவடியைச் சூட்டி அருள்வாயாக.

நிருதர் பொடிபட அமரர் பதி பெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா

நிருதர் = அசுரர்கள் பொடிபட = பொடிபடும்படியும் அமரர் பதிபெற =
தேவர்கள் தம் பொன்னுலகைத் திரும்பப் பெறவும் நிசித அர = (எதிர்த்து வந்த) கூரிய நாகாத்திரம் வளை= சக்கராயுதம் என்ற கணைகளின் முடிகள் சிதறிட = உச்சிகள் சிதறுண்ணவும் கிரி நெறிய= மலைகள் பொடிபட கடல் எரிய = கடல் எரியுண்ணவும் உருவிய = செலுத்திய கதிர் வேலா = ஒளி வேலனே.

நிறைய மலர் மொழி அமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரண் என
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே

நிறைய மலர் பொழி = நிரம்ப மலர்களைப் பொழிந்து அமரர் முநிவரும் = தேவர்களும் முனிவர்களும் நிருப = அரசே குருபர = குரு பரனே குமர = குமரனே சரண் என = உனக்கு அடைக்கலம் என்று பணிய நெடிய முகில் = பெரிய மேகபடலம் உடல் கிழிய வரு = கிழி பட்டு தோன்ற வரும் பரி மயிலோனே = மயிலை வாகனமாகக் கொண்டவரே.

பருதி மதி கனல் விழிய சிவனிடம்
மருவு ஒரு மலை அரையர் திருமகள்
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள்பாலா

பருதி = சூரியன் மதி = சந்திரன் கனல் = அக்கினி (ஆகிய மூன்று சுடர்களையும்) விழிய = மூன்று கண்களாகக் கொண்ட சிவன் இடம் = சிவபெருமானுடைய இடப் பாகத்தில் மருவு = பொருந்தி உள்ள ஒரு மலை அரையன் திருமகள் = ஒப்பற்ற இமயமலை அரசனின் திருமகளாக வந்தவரும் படிவம் முகில் என அரியின் = மேகம் போன்ற கரிய உருவமுள்ள திருமாலின் இளையவ = தங்கையுமாகிய பார்வதி அருள் பாலா = அருளிய குழந்தையே.

பரம கணபதி அயலின் மத கரி
வடிவு கொடு வர விரவு குற மகள்
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே.

பரம = பரம்பொருளான கணபதி = கணபதி அயலின் = அருகில் மத கரி = மதங் கொண்ட யானையின் வடிவு கொடு வரு = உருவு கொண்டு வர விரவு குற மகள் = உடனிருந்த குற மகளான வள்ளி அபயம் என = அபயம் என்று அணை = உன்னை அணையப் பெற்ற பழநி மருவிய பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

இரத்தம், மல சலம், சதை முதலியவை குடியிருக்கும் உடலின் உள்ளே பல விதமான நோய்கள் வேதனை செய்யு ம் இந்த உடலைப் பேணி, மன்மத
னுடைய காம நோயால் பீடுற்று மயக்கம் கொள்ளாமல், என் மனக் கவலை நீங்க, வினைகள் சிதற, காம மயக்கம் ஒழிய மனப் பக்குவத்தைக் கொடுத்து என் தலையில் உனது திருவடியைச் சூட்டி அருளுக.

அசுரர்கள் பொடிபடவும், தேவர்கள் தம் ஊர் புகவும், மலைகள் நெறுங்கிப் போகவும், கடல் எரியவும் வேலைச் செலுத்திய வேலனே, தேவர்களும்
முனிவர்களும் மலர்களைப் பொழிந்துத் துதி செய்யவும் மயில் மீது ஏறி வரும் வீரனே, முச்சுடர்களையும் கண்களாகக் கொண்ட சிவபெருமானுடைய இடப் பாகத்தில் இருப்பவளும், திருமாலின் தங்கையுமாகிய பார்வதி அருள் பாலனே,  கணபதி யானை உருவாய் வர, உடனிருந்த வள்ளி அபயம் என்று அழைத்தவுடன் அவளை அணைத்த பெருமாளே, என் தலையில் உன் பாதங்களைச் சூட்டுவாயாக.

ஒப்புக:
  எனது தலை பதம் அருள்வாயே....
  • எனது தலையிற் பதங்கள் அருள்வோனே................................... திருப்புகழ், களபமுலை

  • சாடுந் தனி வேல் முருகன் சரணம்
           சூடும்படி தந்தது சொல்லுமதோ................................................................கந்தர் அனுபூதி 
 
” tag:

குருதி மல சலம் ஒழுகு நர குடல்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published