F

படிப்போர்

Wednesday 12 September 2012

64.கடலை பொரி

கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
           கடின குடவுதர                                            விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
           கரிணி முகவரது                          துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
           வலம்வ ருமரகத                                   மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
           மருவு சரசவித                                      மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
           ரமரர் சிறையைவிட                            எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
           மரக ரசரவண                                     பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
           பசுப திவரநதி                                          அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
           பழநி மலையில்வரு                           பெருமாளே.
-      64  பழநி

பதம பிரித்தல்

கடலை பொரி அவரை பல கனி கழை நுகர்
கடின குட உதர விபரீத

கடலை பொரி அவரை = கடலை, பொரி, அவரை  பல கனி = பல வகைப் பழங்கள்  கழை = கரும்பு ஆகியவற்றை  நுகர் = உண்கின்ற  கடின = வலிய  குட உதர = குடம் போன்ற வயிற்றையும்  விபரீத = அதிசயமான.

கரட தடம் மு(ம்)மத நளின சிறு நயன
கரிணி முகவரது துணைவோனே

கரட தடம் = மதம் பாய் சுவடு உள்ள பரந்த மும்மத = மூன்று மதங்களையும் நளின = சிறிய. நயன = கண்களையும் (உடைய) கரிணி = யானை முகவரது = முகமுடைய கணபதிக்கு  துணைவனே = சகோதரனே.

வட வரையின் முகடு அதிர ஒரு நொடியில்
வலம் வரு மரகத மயில் வீரா
வட வரையின் = வடக்கே உள்ள மேரு மலையின் முகடு = சிகரங்கள்  அதிர = அதிரும்படி  ஒரு நொடியில் = ஒரு கணப் பொழுதில்  வலம் வரு = (உலகை) வலம் வந்த  மரகத மயில் வீரா = பச்சை மயில் வீரனே.

மக பதி தரு சுதை குற மி(ன்)னொடு இருவரும்
மருவு சரச வித மணவாளா

மகபதி = வேள்விக்குத் தலைவனான இந்திரன் தரு சுதை = தந்த மகளாகிய தேவசேனை  குறமினொடு = குற மகள் வள்ளியொடு  இருவரும் மருவு = இருவருடனும் சேர்ந்து  சரச வித = லீலை களைக் செய்யும் மணவாளா = மணவாளனே.

அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர்
அமரர் சிறைய விட எழில் மீறும்

அடல் அசுரர்கள் = வலிமை வாய்ந்த அசுரர்கள்  குலம் முழுதும் மடிய = குலம் முழுவதும் இறக்கும்படியும்  உயர் அமரர் சிறையை விட = சிறந்த தேவர்கள் சிறையினின்று விடுபடவும்  எழில் மீறும் = அழகு மிகுந்த.

அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு
அரகர சரவணபவ லோலா
அருண = சிவந்த கிரண ஒளி = சூரியனுடைய ஒளி ( ஒத்த) ஒளிரும் = வீசும் அயிலை விடும் = வேலைச் செலுத்தும் அரகர = சிவ சரவணபவ = சரவணபவனே லோலா = திருவிளையாடல் புரிபவனே.

படல உடு பதியை இதழி அணி சடில
பசு பதி வர நதி அழகான

படல உடுபதி பதியை = கூட்டமான நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனையும்  இதழி = கொன்றை மலரையும்  அணி சடில= அணிகின்ற சடையை உடைய  பசுபதி = சிவ பெருமானும். வர நதி = கங்கையும் அழகான = அழகிய.

பழ நிமலை அருள் செய் மழலை மொழி மதலை
பழநி மலையில் வரு பெருமாளே.

பழ நிமலை = பழமையானவளும் பரிசுத்தமானவளும் ஆகிய பார்வதி  அருள் செய் = பெற்ற  மழலை மொழி மதலை = மழலை மொழியைப் பேசும் குழந்தையே   பழநி மலையில் வரு பெருமாளே = பழநி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கடலை, அவரை முதலிவற்றை உண்ணும் பெரிய வயிற்றை உடையவரும்f, மதம் பொழியும் மும்மதங்களைக் கொண்டவருமாகிய, யானை முகக் கணபதிக்குச் சகோதரனே. மேரு மலை அதிரும்படி மயிலின் மேல் உலகைச் சுற்றி வந்த வீரனே. இந்திரன் மகளான தேவசேனை, குற மகள் வள்ளி ஆகிய இருவருடன் லீலைகள் செய்யும் மணவாளனே. வலிய அசுரர்கள் குலம் இறந்து போகும்படியும், தேவர்கள் சிறை மீளவும் வேலை எய்தியவனே. 

மதி, கொன்றை ஆகியவற்றை அணிந்த சிவபெருமானும், கங்கையும் பரிசுத்தமான பார்வதியும் பயந்த மழலைச் சொற்களை உடைய குழந்தையே, பழநி மலையில் அமர்ந்த பெருமாளே, உம்மைத் துதிக்கின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

அ. வடவரையின் முகடு அதிர...
(பார்திசை வான முற்றும் பரியென நடாத்தலுற்றான்)
(மேருத் தடவரு இடிய கலாபம் வீசி ஏகிற்றுத் தோகை மஞ்ஞை) --------------- கந்த புராணம்  
அரகர....
சங்கரனை ஷண்முகன் என்பது கோட்பாடு. ஐம்முகச் சிவனாரது பழைய வடிவு ஆறுமுகம். ஆதலால் அரன் என்னும் திருநாமத்தால் முருகனை அழைக்கின்றார்.
   (சிவசிவ அரகர தேவா நமோநம
   திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
  ஜெய ஜெய அரகர தேவா சராதியர் தம்பிரானே) ---------------------- திருப்புகழ் ( அவகுண)
இ. பழ நிமலை அருள் செய் மதலை...
   (புரக்குஞ்சங் கரிக்குஞ்ங்
   கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
   புதுக்குங்கங் கையட்குந்தஞ் சுதனானாய்..) --------------------------- திருப்புகழ் ( கருப்பந்தங்)
 
   பழ நிமலை, பழநி மலை அருமையான பதப் பிரயோகம்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published