மனக்கவலை
யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு
நூல்வி தங்கள் தவறாதே
வகைப்படிம
னோரதங்கள் தொகைப்படியி னால்நி னைந்து
மயக்கமற
வேத முங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய
பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு
ளாக மங்கள் முறையாலே
வெகுட்சிதனை
யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவணங்க வரவேணும்
மனத்தில்வரு
வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம
தேப ணிந்த முநிவோர்கள்
வரர்க்குமிமை
யோர்க ளென்பர் தமக்குமன மேயிரங்கி
மருட்டிவரு
சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமு
னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு
தாள வந்த பெரியோனே
செழித்தவள
மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி
வாழ வந்த பெருமாளே.
-86 பழநி
பதம் பிரித்து
உரை
மன கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து
வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே
மனக் கவலை ஏதுமின்றி = மனக் கவலை சிறிதேனும் இல்லாமல்
உனக்கு அடிமையே புரிந்து = உனக்கு அடிமை செய்யும் பணியையே
பூண்டு வகைக்கும் = வகையாய் அமைந்துள்ள. மநு நூல் விதங்கள் = மநு நீதி நூல் முறைகளில். தவறாமே = தவறாமல்.
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி
மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி
வகைப்படி = நல்லமுறையில் மனோரதங்கள் = மன விருப்பங்கள் தொகைப் படியினால் = கணக்கின் படியே இலங்கி = விளங்கி மயக்கம் அற = ஐயந்திரிபு இல்லாமல் வேதமும் கொள் = வேதங்களில்
சொல்லப்பட்ட. பொருள் நாடி = பொருளை ஆய்ந்து விரும்பி.
வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து
மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே
வினைக்கு உரிய = வினைக்கு ஈடான. பாதகங்கள்
= பாதகச் செயல்களை துகைத்து = விலக்கி. வகையால் நினைந்து = முறைப்படி தியானித்து மிகுத்த பொருள் = மேலான பொருள் களைக் கொண்ட ஆகமங்கள் = ஆகமங்களில் சொன்ன முறையாலே = முறைப்படி.
வெகுட்சி தனையே துரந்து களிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க வர வேணும்
வெகுட்சி தனையே = கோபத்தை துரந்து = விலக்கி களிப்புடனே நடந்து = மகிழ்ச்சியுடன் நடந்து மிகுக்கும் உனையே வணங்க = மேம்பட்டு விளங்கும் உன்னையே (நான்) வணங்க வர வேணும் = (நீ
அருளைத் தர) வர வேண்டுகின்றேன்.
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து
மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள்
மனத்தில் வருவோனே = (தியானிக்க) மனத்தில் வருபவனே. என்று = என்று உன் அடைக்கலம் அதாக வந்து = உன்னிடம் அடைக்கலப் பொருளாக வந்து. மலர்ப் பதமே = உனது மலர்ப் பாதங்களை பணித்த முநிவோர்கள் = பணிந்த முனிவர்களுக்கும்.
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி
மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா
வரர்க்கும் = (பிற) சீலர்களுக்கும். இமையோர்கள் என்பர்
தமக்கு = தேவர்களுக்கும். மனமே இரங்கி = மனம்
கசிந்து. மருட்டி வரு சூரை = பயமுறுத்தி வந்த சூரனை. வென்ற = வெற்றி கொண்ட, முனை வேலா = கூரிய
வேலனே.
தினை புனம் மு(ன்)னே நடந்து குற கொடியையே மணந்து
செகத்தை முழுது ஆள வந்த
பெரியோனே
தினைப் புனமே நடந்து = தினை புனத்தில் நடந்து. குறக் கொடியையே மணந்து = குறவர் கொடியாகிய வள்ளியை மணம் செய்து. செகத்தை = உலகத்தை. முழுது
ஆள வந்த பெரியோனே = ஆள வந்த பெரியோனே.
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த
திருப்பழநி வாழ வந்த பெருமாளே.
செழித்த = செழிப்புற்ற. வளமே சிறந்த = வளம் பொலிந்த மலர்ப் பொழில்களே நிறைந்த = மலர்ச் சோலைகள் நிறைந்த திருப் பழனி வாழ வந்த பெருமாளே = திருப் பழனியில் வீற்றிருக்க வந்த பெருமாளே.................................
சுருக்க உரை
மனக் கவலை சிறிதும்
இல்லாமல், உனக்கு அடிமை செய்வதையே பணியாகக் கொண்டு, நீதி நூல் முறைகளில் தவறாமல், நல்ல
முறையில் ஒழுகி, வேதங்களில் சொல்லப் பட்ட பொருளை ஆராய்ந்து, சினத்தை விலக்கி, கடமைகளைச்
செய்து, மேம்பட்டு விளங்க நீ அருளைத் தர வர வேண்டும்.
உன்னிடம் அடைக்கலமாக
வந்த தவசிகள், சான்றோர், தேவர்கள் பொருட்டு மனம் இரங்கி, பயமுறுத்தி வந்த சூரனை வென்ற
கூரிய வேலனே. முன்பு தினைப் புனத்தில் நடந்து சென்று, குறப் பெண் வள்ளியை மணம் புரிந்தவனே.
செழிப்பு மிக்க பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. உன்னை நான் முறைப்பட வணங்க அருள்
புரிவாயாக.
ஒப்புக
உனக்கு அடிமையே புரிந்து....
ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
பாடும்
பணியே பணியா அருள்வாய். ............. ..கந்தர்
அனுபூதி
Meaning and
explanations provided by Dr. C.R.
Krishnamurti,
Professor Emeritus, University of British Columbia,
Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by Shantha and Sundararajan

No comments:
Post a Comment
Your comments needs approval before being published