எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப்
படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு
முயிரியை பிறவியி னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை
களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன
முருகிநல் சுருதியின் முறையோடே
சந்தித் தரஹுர சிவசிவ சரணென
கும்பிட்
டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித
மெழஇரு விழிபுனல் குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட
மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி
லெனதுள முருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன
டுடுடுடு டமடம
துங்கத்
திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி
கலகல கலினென
சிந்தத்
சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற்
றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக்
குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள
தனகிரி யுமையரு ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப்
பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.
-96 திருவேரகம்
பதம் பிரித்து உரை
எந்த
திகையினும் மலையினும் உவரியின்
எந்த
படியினும் முகடினும் உள பல
எந்த
சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே
எந்தத் திகையினும்
= எந்தத் திசையிலும். மலையினும் = மலையிலும். உவரியின் = கடல் சூழ்ந்த. எந்தப் படியினும் = எந்தப் பூமியிலும். முகடினும் = வீடு, மலை உச்சிகளில். உள பல = வசிக்கும் பல வகையான. எந்தச் சடலமும் = எந்த வகையான உடலிலும் உயிர் இயை = உடலில் வாழும் உயிருள்ள. பிறவியின் = எந்த பிறப்புக்களிலும். உழலாதே = (நான்) உழன்று திரியாமல்.
இந்த
சடம் உடன் உயிர் நிலை பெற நளினம்
பொற்
கழல் இணைகளில் மரு மலர் கொடு
என்
சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே
இந்தச் சடமுடன்
உயிர் நிலை பெற = இந்த உடலில் இருக்கும் போதே என் உயிர் நிலை
பெறுவதற்காக. நளினம் பொன்
கழல் இணைகளில் = (உன்) தாமரைத் திருவடிகளில். மரு மலர் கொடு = மணமுள்ள மலர்களைக் கொண்டு. என் சித்தமும் மனமும் உருகி = என் சித்தமும் மனமும் உருகி. சுருதியின் முறையோடே = சிறந்த வேதங்களால் சொல்லப்பட்ட வழியே (உன்னை).
சந்தித்து
அரஹர சிவ சிவ சரண் என
கும்பிட்டு
இணை அடியவை என தலைமிசை
தங்க
புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய
சந்தித்தும் = சந்தித்தும் அரஹர சிவசிவ
சரண் என = அரகர சிவ சிவ சரணம் என்று கும்பிட்டு = (நான்) வணங்கி வழி பட இணை அடி அவை = உன் திருவடிகளை என தலை மிசை = என்னுடைய தலை மேல் தங்க = பொருந்த. புளகிதம் எழ = என் உடல் மெய் சிலிர்ப்பு
கொள்ள இரு விழி = இரண்டு கண்களிலும் (ஆனந்தக் கண்ணீர்) புனல் = அருவி போல குதி பாய = குதித்துப் பாய.
சம்பை
கொடி இடை விபுதையின் அழகு
முன்
நந்த திரு நடமிடும் சரண் அழகுற
சந்த
சபை தனில் எனது உளம் உருகவும் வருவாயே
சம்பை = மின்னல் போன்ற கொடி இடை = கொடி போன்ற இடையை உடைய விபுதையின் = தேவசேனையின் முன் நந்த = அழகு முன்னே விளங்க திரு நடம் இடு = அழகிய நடம்
புரியும் சரண் அழகுற = (உனது) திருவடி அழகுடன் பொலிய சந்தச் சபை தனில் = (இந்த) அழகிய சபையில் எனது உள்ளம் உருகவும் = எனது உள்ளம் உருகவும் வருவாயே = வந்தருள்வாயாக.
தொந்தத்.......................................................டமடம
துங்க
திசை மலையும் வரியும் மறுக சல்லரி பேரி
தொந்தத்...டமடம
= என்ற ஓசைகள் துங்கத் திசை = உயர்ந்த திசைகளும் மலை உவரியும் = மலையும் கடலும் மறுக = கலங்கும்படி. சல்லரி = கைத்தாளம். பேரி = பேரி என்னும் வாத்தியங்கள்.
துன்ற
சிலை மணி கலகலகலின் என
சிந்த
சுரர் மலர அயன் மறை புகழ் தர
துன்பற்ற
அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா
துன்ற = நெருங்கி ஒலிக்க சிலை மணி = முழங்கும் மணி கலகல கலின் என = கலகலவென்று சிந்த = சப்திக்க சுரர் மலர = தேவர்கள் பூமலர் சிந்த. அயன் = பிரமன் மறை புகழ் தர = வேதத்தைச் சொல்லிப் புகழ துன்புற்ற அவுணர்கள் = துன்பம் அடைந்த அசுரர்கள். நமன் உலகு உற = யமனது உலகை அடைய விடும் = செலுத்திய அயில் வேலா = கூரிய வேலாயுதனே.
கந்த
சடை முடி கனல் வடிவு அடல் அணி
எந்தைக்கு
உயிர் எனும் மலை மகள் மரகத
கந்த
பரிமள தன கிரி உமை அருள் இளையோனே
கந்தச் சடைமுடி = மணம் பொருந்திய சடை முடி. கனல் வடிவு = நெருப்பு போன்ற திருவுருவத்தையும் அடல் அணி = வெற்றியையும் கொண்ட எந்தைக்கு = என் தந்தையாகிய சிவபெருமானுக்கு உயிர் எனும் = உயிர் போன்ற. மலை மகள் = மலைமகள் மரகத - பச்சை நிறத்தி கந்தப் பரிமள = சந்தனமாதிய நறுமணத்த தன கிரி = கொங்கை மலைகளை உடையவள் (ஆகிய) உமை அருள்
இளையோனே = உமா தேவி பெற்றருளிய இளையோனே.
கஞ்ச
பதம் இவர் திருமகள் குல மகள்
அம்
பொன் கொடி இடை புணர் அரி மருக
நல்
பொழில் திகழ் குரு மலை மருவிய பெருமாளே.
கஞ்சப் பதம் இவர் = தாமரை என்னும் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ளவரான. திருமகள் = இலக்குமி. குல மகள் = குலமகள். அம் பொற் கொடி
இடை = அழகிய கொடி போன்ற இடையை உடையவள். புணர் அரி = மணந்துள்ள திருமாலின். மருக = மருமகனே. நல் கந்தப்
பொழில் திகழும் = நல்ல மணம் வீசும் சோலைகள் விளங்கும். குரு மலை மருவிய பெருமாளே = சுவாமி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.
சுருக்க உரை
உலகில்
உள்ள எந்த வகையான உயிர் சேர் பிறவிகளிலும் நான் உழன்று திரியாமல், உன் தாமரைத் திருவடிகளில் மலர் கொண்டு, வேத முறைப்படி சந்தித்து, அரகர,
சிவ சிவ, சரணம் என்று வழிபட, அழகிய தேவசேனை முன்னம் நடனம் புரிய, உனது திருவடி அழகுடன் பொலிய, இந்தச்
சபையில் எனது உள்ளம் உருக வந்து அருள்வாயாக.
பல வகை
முரசு வாத்தியங்கள் முழங்க,
தேவர்கள் பூக்களைச் சொரிய, அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே,
சிவபெருமானுக்கும்,
உமைக்கும் குழந்தையே, திருமாலின்
மருகனே, சபை தனில் எனது உள்ளம் உருக வருவாயே.
விளக்கம் குக ஸ்ரீ ரசபதி
யானை
வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே என்பது பழமொழி. பருதி உதயம் பின்னே
கொக்கரக்கோ முன்னே என்று கூறுவாரும் உண்டு. இது இன்மைய அனுபவம். நாதன் வருவது
பின்னே அருள் நாதம் வருவது முன்னே என்பது ஆன்றோர் காணும் அனுபவம். ஆலய வழிபாட்டுக்
காலங்களில் இச்செய்தி சூசகமாக
அறிவிக்கபடும். ஆண்டவனை வழிபடுகிறது ஆன்மா. வழிபாட்டில் ஒருமை வரும். அந்நிலையில்
உலக ஓசையை செவிகள் உணரா.
ஒருமை
நீடிக்க கலகலத்த கலை ஒலிகள் கரைந்துபடும் . அதன் பின் நலம் சிறந்த நாதம் எழும்.
அந்நாதம்,
பரன் சன்னிதான பறை ஒலி. பறை தெய்வ தத்துவம். - நாதப்
பறையினீர் ----- நாதர் இந்நாதனார் அன்னே - எனும் இத்திருவாசக அன்னைப்பத்து இங்கு
எண்ணத்தகும் . நாதானுபவம் உண்டகும் காலத்தில் தாம் தாம் என மணி முழக்கி உம்பர்
வழிபடுவது உணரப்பெறும். அப்புது அனுபவத்தில் மகத்தான அகக்கண் மலரும். அஹா, என்ன
அற்புதம்.
அறுமுகன்
அடியில் மலர் தூவி அமரர் அர்ச்சனை செய்கின்றார். பத்மாசனத்தில் இருக்கும fபிரம்ம தேவர் பாராயணம் செய்கின்றார். மறைகள் மந்திராச்சனை
செய்கின்றன. அம்மான் திருக்கை ஞான சக்தி உடனே புனித ஊங்காரம் செய்து புறப்படுகின்றது.
அந்த அதிர்ச்சியில் திசைகள் குழம்பின. மலைகள் குலைந்தன. கடல்கள் கலங்கின.
ஒருமையின்
பயனாக இவைகளை உணர்ந்து நெகிழ்ந்த உயிரில் , இதுவரை ஒளிந்திருந்த காமக்ரோத லோப மோக மத மாச்சர்ய அவுண மாசுகள் ஞானசக்தியின் ஊங்காரத்தால்
நாசமாகின்றன. இந்த அனுபவத்தை தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன
டுடுடுடு டமடம துங்கத் திசை மலை உவரியும் மறுக சலரி பேரி துன்றச் சிலை மணி கலகல
கலினென சிந்தச் சுரர் மலர் அயன் மறை புகழ் தர துன்புற்ற அவுணர்கள் நமன் உலகுற
விடும் அயில் வேலா என்கிறார் அருணைப் பெருந்தகை .
யார்
இந்த வேலோன்? எனும்
வினாவிற்கு அடுத்துவரும் அடிகள் விடை அளிக்கின்றன. மணம் கமழ் சடையும் மெய்ஞானக்
கனல் மேனியும் எண்குணத்துள் ஒன்று எனும் ஏகமான ஆற்றலும் பேரழகும் எந்தைக்கு உரியன.
எந்தை மேதகு கனல் எழு ஞான மேனியர். எம் அம்மை மலையிலிருந்து எழுந்த மகளாகி
குளிர்ந்த பசுமைக் கோலம் கொண்டவள். இங்ஙனம் வெம்மையது சிவம், தண்மையள் எமை அளித்த தாய். எந்தைச் சடையில் அருள் கந்தம்
இருக்கிறது. தாய் அருள் மணம் தனத்தில் உள்ளது.
ஓர்
அன்பர் யோகாந்தம் கொண்டார். கலாந்தம் கண்டார். நாதாந்தத்தில் நயந்தார்.
அங்கிருந்து அவர் உணர்வு போதாந்தம் நோக்கிப் போகிறது. வளரும் அவர் நிலையில்
இருமாப்பு வரும். அதை அடக்க வழி என்ன என
ஆய்ந்தார். ஒரு முடிவிற்கு வந்தார். பருவமேதிய பாவையாக தன்னை பாவித்தார். கந்தப்
பெருமானைக் கருதினார். கட்டு மீறியது காதல். கோவிலுக்குச் சென்றார் சன்னிதியில்
நின்றார். குரும்புத் தனம் தை தை என்று குதித்தது. - குன்றோடு வாழ்வன நின்
தோளும் என் இரு கொங்கைகளும் என்று ஓதுவார்
அவற்றிக்கு ஆயுள் ஒன்று இலை என்னிலும் பால் வென்றோங்குகின்றவை யாதோ அறிவம் வெருண்டு ஒதுங்கேல் நன்றோந்துளார் புடைசூழும் செந்தூர்
செந்தில் நாயகனே - பயனார்ந்த பாடல் ஒன்றைப் பாடினள்.
முருகா, மலை போன்ற தோளன் என்று உன்னை மதிப்பார். மலை போல் பருத்த
முலை என்று என்னைப் பாடுகின்றனர். மலைத் தோள்களுக்கு பொருத்தம் மலைக்குயம். நினது ஆறு
தோள்களுக்கு ஒரு குயம் மற்றாறு தோள்களுக்கு மறு குயம். எனினும் இணை விளைச்சி
போரில் வெற்றி கொளும் பெண்பால் நான். தோல்வி கொள்பவர் நீர். அடேடே என்ன இது, அச்சமாக இருக்கிறதா ? ஓகோ ஒதுங்கிப் போகிறீரே? வேண்டாம். இது
வெறும் பாடல் தான். புனிதமான இப்பாவனா அத்துவிதர் உன்னை புடை சூழ்ந்துளர். நீர்
நமது சிறந்த செந்தில் நாயகர். உம்மையே நோக்கி உயர்களான ஜெந்துக்கள் ஊர்ந்துவரும்
பதி இது என்பது இப்பாட்டின் உள் பொருள்.
இப்பொருள்
உணர்வோடு அடல் அணி எந்தை, தனகிரி உமை
என்பதை உணர்வார் உள்ளம் உருகல் உறும்.
கந்தச் சடை முடி கனல் அணி எந்தைக்கு உயிர் எனும்
மலைமகள்
மரகத கந்தப் பரிமள தனகிரி உமை என்று
பாடும் அடியில் சிவம் சிவம் என்று ஒலி எழுதலை ஓதிப்பாருங்கள்.
உமா
எனும் பெயர் பிரணவ வடிவி எனும் பொருள் அது. எந்தை சிகரத்தான். எந்தைக்கு உயிர்
எனும் உமை வகரத்தாள். உமை அருள் இளையோன் மகரத்தான் என்பதை நினைத்த போதே நெஞ்சம்
நெகிழ்கிறதே. நீர் மேல் கமலம் நிற்கிறது, அதன் மேல் திருமகள் அமர்ந்துளள், நீரைத் தாங்குகிறது நிலம். எனவே குலமகள் என்று நிலமகளைக் குறிப்பிடுகிறார்.
இருவர் பதியாம் திருமால் அதிர்க்கும் பகையை அழிப்பவர். தேவியர் மூலம் உலகைக்
காப்பர். அவர் மருகர் நீர் எனும் பொருள் வெளியாக அரி மருகா எனும் அருமையே அருமை.
மணங்கமழும் சோலைகள் ஏரகப் பதி முழுதும் மலிந்துள்ன. குருவாகி பல குறிப்பை
தந்தைக்கு கூறிய குமரன் இருந்த அச்செய்குன்றை குருமலை என்றே குறிப்பிட்டார். ( கு
- இருள்,
ரு - ஒளி ) ஆணவ இருளை அடர்த்து அருள் ஒளி காட்டும் தலம்
என்பது குறிப்பு. திரு - அருள், ஏர் - எழுச்சி ,
அகம் - உள்ளிடம். அருள் எழும் உள்ளத்தில் அறியாமை தீரும்
மெய் ஒளி விளங்கும் என்பது குறிப்பு. இத்தனையும்
செய்யும் பெருமான் எங்கும் நிறை பெரிய பொருள் ஆதலின் பெருமாளே என்று விளித்தார்.
84 லட்சம் யோனி பேதமான படைப்பு எங்கும் பரவி இருக்கின்றது. திசை எல்லாம் , மலை எல்லாம், கடல் எல்லாம் ,
நிலம் எல்லாம், வான் முகடு எல்லாம் வளர்ந்த படைப்பு உயிர்கள் வசிக்கின்றன. புல்லாகி ---- எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்ற திருவாசக அடிகளை எண்ணும் போதெல்லாம் குடர்
நமக்குக் குழம்புகிறது. என்ன மோசமான பிறப்பு . இப்பிறப்பு தப்பினால் எப்பிறப்பு
வாய்க்குமோ இதை மறந்தமையால் கெட்ட நினைவும் கேடு கெட்ட புத்தியும் பொறாமையும்
பொச்சரிப்பும் பொங்கி வழிகிறதே. எவரை திருத்தவும் ஆவதில்லை. எதிர் நாளில் நம் கதி
என்ன ?
இந்த நினைவே இன்று வருகிறது. இப்பிறப்புடன் என் சரித்திரம்
தீர்வதாகஉன்னுடன் ஒன்றாகும் அத்துவிதம் சித்தித்தால் உய்தி அடியேற்கு உளதாகும்.
அதற்கென்றே உமது திருவடிகளில் மருவும் நினைவோடு மணம் கமழ் மலர்களை கைக் கொள்வேன்.
பயனான அம்மலர்களில் என் உணர்வைப் பாய்ச்சுவேன். சித்து - அறிவு ,அதை உடையது சித்தம். மனனம் செய்வது மனம். கனுவற திருவடியில்
கலப்பு நேரப்போகிறது என்று உணர்ந்த உள்ளமும் மனமும் உருகும் நிலையில் , ஆகம விதிப்படி அம்மலரை உம் திருவடிகளில் அர்ச்சிப்பேன்.
அந்நிலையில் சால்புடைய தேவரீரை என் உணர்வு சந்திக்கிறது. அந்த சந்திப்பு விழாவில், தீரா மலம்
தவிர்க்கும் தேவா,
அடங்கா மாயத்தை அடக்கும் அத்தா, எனும் பொருளில் ஹர ஹர என்பேன்.
சி -
முத்தி நிலை, வ - அருள் நிலை யகரமான ஆன்மா, நான் உன் அடைக்கலம் எனும் பொருளில் சரண் எனும் குரல் கொடுத்து கும்பிடுவேன்.
இது சிவய வசி,
சிவய சிவ எனும் காரண ஐந்தெழுத்தைக் கருதிய நிலை
இடக்கரம்
- ஆன்மா,
வலக்கரம் - சிவம், இரண்டும் இப்படி சேர்தல் வேண்டும் எனும் குறிப்பு முகம் கூப்பிய கரங்களால்
கும்பிடும் நிலை. ஆஹா,
அதே சமயம் அருளார்ந்த உமது திருவடிகள் எளிய என் தலை மீது
தங்கும். இது பிரம்ம ரத்திரப் பேறு என்று பேசுகின்றனர் பெரியோர். இந்த அனுபவம்
கண்டபின் விளைவது ஆனந்தாதிசயம். உடல் இன்பத்தால் உவகை அடைய, கல கல என்று கண் மழை பொழிய அருள் நாத போதமான சித்சபை தோன்ற
அந்தச் சபையில் அடியேன் உள்ளம் உருகும் நிலையில் வா, பெருமா, வந்தருள், மின்னல் கொடி போல துவளும் இடையினர். அந்த பேசாத மோன
பெருமாட்டி எனும் தேவயானையார். வி - மேலான, புதர் - புத்தி உடையவர்.
விண்ணவர்
பெயராய் விளங்குகிறது இப்பெயர். இப்பெயரின் பெண்பால் விபுதை. தேயானையாரை விபுதை என
குறிப்பிடுகிறேன். அத்தேவியின் அருள் அறிவின் பொலிவு மிகுந்துள அது கண்டு நின்
நிறை ஞான சொரூப திருவடிகள் நிருத்தம் செய்கின்றன.
அறிவொளி அழகின் முன் அறிவொளி அழகானன நீ
அருளோடு வெளியாகி ஆடிய அற்புதம் அறிந்துளன். ஆம் ஆம் அத்திருவடிகள்
தரிசமாகி உள்ளம் பாகாய் உருகும் நிலையில் எழுந்தருள், விமலா வந்தருள் என்று விண்ணப்பித்தபடி.
மெய்
தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு
என்
கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் தவிர்த்து உன்னைப்
போற்றி செய செய போற்றி எனும் கை தான் நழுவ விடேன் உடையாய் எனைக் கண்டு கொள்ளே என்ற
திருவாசகம் இங்கு எண்ணத்தகும்
ஒப்புக:
1 உயிரியை பிறவி...
உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் ---சம்பந்தர் தேவாரம்
புல்லாகிப்
பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப்
பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.....எல்லாப்
பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமானே
-------------------------------- திருவாசகம்
2. சந்தச் சபைதனில்...
பிரபுட
தேவனிடம்,
சம்பந்தாண்டான் வாதம் நிகழ்ந்த போது, தாம் கொடுத்த வாக்கின் படி, அருணகிரியார் சபையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளிய பாடல்.
3. சம்பைக் கொடி....
சம்பைக்கொடியிடை
ரம்பைக்கரசி யெனும்பற் றருமகள்--- திருப்புகழ்,விந்துப் புளகித

No comments:
Post a Comment
Your comments needs approval before being published