F

படிப்போர்

Tuesday, 18 September 2012

82. .பஞ்ச பாதகன்

பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு 
   வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி 
   பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை             பவுஷாசை 
   பங்கள் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ 
   பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை 
   பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு                      சதிகாரர் 
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் 
   தங்கள் வாணிபங் காரியம லாமலரு 
   ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக                    ழடியேனை 
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி 
   சந்த்ர சேகரன் பாவைவிளை  யாடுபடி 
   கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்                  புரிவாயே 
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ 
  டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு 
  வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி        முருகோனே 
மங்கை மோகசிங் காரரகு ராமரிட 
  தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் 
   மங்க ளாயிசந் தானசிவ காமியுமை                   யருள்பாலா 
கொஞ்ச மாசுகம் பொலமொழி நீலகடை 
   பெண்கள் நாயகந் தோகைமயிற் போலிரச 
   கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர    அணைவோனே 
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் 
   கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் 
   கந்தி யோடகஞ் சேர்பழனி வாழ்குமர              பெருமாளே. 
-       82 பழநி

பதம் பிரித்து உரை 

பஞ்ச பாதகன் பாவி முழு மூடன் வெகு 
வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி 
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷ ஆசை 

பஞ்ச பாதகன் = ஐந்து பெரிய பாதகங்களைச் செய்தவன் பாவி = பாவி. முழு மூடன் = முழு முட்டாள் வெகு வஞ்ச லோபியன் = மிக்க வஞ்சகத்தோடு கூடிய பேராசைக்காரன் சூது கொலைகாரன் = சூது, கொலை இவைகளைச் செய்பவன் மதி = அறிவில் பண் கொளாதவன் = பண்பையே கொள்ளாதவன் பாவ கடல் ஊடு நுழை = பாவமாகிய கடலுக்குள் நுழைகின்ற பவுஷாசை = செருக்கிலும் ஆசையிலும். 

பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ 
பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை 
பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்

பங்கன் = குற்றம் உடையவன் (ஆகிய நான்) மோதி =  அதனால்
தாக்குண்டு பாழ் நரகில் வீணின் விழ = அந்தப் பாழ் நரகத்தில் வீணாக விழும்படி. பெண்டிர், வீடு, பொன் தேடி = பெண், மண், பொன் என்னும் மூவாசை கொண்டு நொடி மீதில் = ஒரு நொடிப் பொழுதில் மறை = மறைந்து கிடக்கும் பஞ்ச மா மலம் பாசமொடு கூடி = ஐம்பெரு மலங்களுடனும், பாசங்களுடனும் கூடி வெகு சதி காரர் = மிக்க மோசக் காரர் ஆகிய. 

அஞ்சு பூதம் உண்ட அ கடிய காரர் இவர் 
தங்கள் வாணிபம் காரியம் அ(ல்)லாமல் அருள் 
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை 

அஞ்சு பூதம் உண்ட  = ஐந்து பூதங்களால் ஆகிய அ கடிய காரர் இவர் தங்கள் = அந்தக் கடுமையான இவர்களுடன் வாணிபம் காரியம் அலால் = வியாபார காரியங்களில் கலவாமல் அருள் அன்பர் பாலுடன் = அருள் பெற்ற அன்பர்களிடத்தே கூடி அறியாத = சேர்ந்து அறியாத புகழ் அடியேனை = புகழையே கொண்டுள்ள அடியேன் நான் (ஐ = சாரியை). 

அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி 
சந்த்ர சேகரன் பாவை விளையாடு படிக 
அந்த நாடுடன் கூடி விளையாட அருள் புரிவாயே 

அண்டர் = தேவர்களுடன் மால் அயன் தேடி அறியாத = திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஒளி சந்த்ர சேகரன் = சோதியாகிய சந்திர சேகரனும் பாவை = பாவையாகிய உமையும். விளையாடு = கூடி விளையாடுகின்ற படிக அந்த நாடுடன் =  ஸ்படிகம் போல் அழகிய நாடாகிய சிவலோகத்தில் கூடி விளையாட = (நானும்) கூடி விளையாடுதவற்கு அருள் புரிவாயே = அருள் புரிவாயாக. 

வஞ்ச மா சூரன் சேனை கடலோடு குவடும் 
கவே இனன் போல ஒளிர் வேலை விடு
வண் கையா கடம்பு  ஏடு தொடை ஆடு முடி முருகோனே 

வஞ்ச = வஞ்சகம் நிறைந்த மா சூரன் = பெரிய சூரனும் சேனை கடலோடு = அவனது சேனையும், கடலும் குவடும் = கிரௌஞ்ச மலையும் கவே = கவிழ்ந்து அழியுமாறு இனன் போ= சூரியனைப் போல ஒளிர் வேலை விட = ஒளி வீசும் வேலைச் செலுத்திய வண் கையா = அழகிய கையனே கடம்பு ஏடு தொடை = கடப்ப மலர் மாலை விளங்கும் முடி = திருமுடியை உடைய முருகோனே = முருகனே. 

மங்கை மோக சிங்கார ரகு ராமர் இட 
தங்கை சூலி அங் காளி எமை ஈண புகழ் 
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா 

மங்கை = மங்கை. மோக சிங்கார = வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமரிட தங்கை = இராமனுடைய தங்கை சூலி = சூலம் ஏந்தியவள் அம் காளி = அழகிய காளி தேவி எமை ஈண = என்னைப் பெற்ற புகழ் மங்கள ஆயி = புகழ் நிறைந்த மங்கள கரமான தாய் சந்தான சிவகாமி = சந்தான மரம் போல வேண்டுவோர்களுக்கு வேண்டியதை அளிக்கும் சிவகாமி உமை = உமா தேவி. அருள் பாலா = அருளிய பாலனே. 

கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை 
பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச 
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே 
கொஞ்சு = கொஞ்சுகின்ற மா சுகம் போல = அழகிய கிளியைப் போல் மொழி = பேச்சையும்  நீல கடை = கரிய கடைக் கண்ணும். பெண்கள் நாயகம் = பெண்களுக்குள் தலைமையும் தோகை மயில் போல = கலாபம் போலச் சாயலும் இரச கொங்கை = இன்பம் நிறைந்த கொங்கையும் மால் = பெருமையும் கொண்ட குறம் பாவை = குறப் பெண்ணாகிய வள்ளி ஆவல் தீர வர = ஆசை தீர வந்து அணைவோனே = அவளை அணைபவனே. 

கொண்டல் சூழு(ம்)அம் சோலை மலர் வாவி கயல் 
கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் 
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே. 

கொண்டல் சூழும் = மேகங்கள் சூழும். அம் சோலை = அழகிய சோலைகளும் மலர் வாவி = மலர்கள் நிறைந்த குளங்களும் கயல் கந்து பாய = கயல் மீன்கள் குதிரை போல் பாய்வதால் நின்று ஆடு = அசைகின்ற துவர் பாகை உதிர் = துவர்ந்த பாக்குகள் உதிர்கின்ற கந்தியோடு = கமுக மரங்களையும் அகம் சேர் = தன்னிடத்தே கொண்ட பழநி வாழ் குமர பெருமாளே = பழனியில் வீற்றிருக்கின்ற குமரப் பெருமாளே. 

சுருக்க உரை

பஞ்ச பாதகங்களும் செய்பவன், சூது, கொலை இவற்றைச் செய்பவன், பண்பில்லதவன், பாவமாகிய கடலுள் நுழையும் செருக்கும், ஆணவமும் கொண்டவன், பெண், மண், பொன் என்னும் மூவாசைகளால் தாக்குண்டு, நரகில் வீழ்பவன், ஐந்து பெரிய மலங்கள் கூடி,அதனால் உண்டாகும் பாசங்களால், பொருள் ஈட்டுவதில் என் நேரத்தைக் கழிப்பவன் அல்லாது அருள் பெற்ற அன்பர்களுடன் கூடி அறியாதப் புகழைக் கொண்டவன். நான் இத்தகைய கொடியவனாக இருந்தும், தேவர்களும், திருமாலும்,  பிரமனும் தேடிக் காண முடியாத சோதி வடிவான சந்திர சேகரனும், உமா தேவியும் கூடி விளையாடும் அழகிய சிவ லோகத்தில் நானும் கூடி விளையாட அருள் புரிவாயாக. 

வஞ்சகம் நிறைந்த சூரனும், அவனது சேனையும், கடலும், கிரௌஞ்ச மலையும் ஒடுங்க, ஒளி வீசும் வேலைச் செலுத்திய திருக்கரம் உடையவனே, கடம்பு மலர் விளங்கும் முடியை உடைய முருகனே, இராமனுடைய தங்கை, சூலம் ஏந்தியவள், அழகிய காளி, என்னைப் பெற்றவள், வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் சிவகாமி அருளிய பாலனே, கிளி பொன்ற மொழியும், மயில் போன்ற சாயலும் உள்ள வள்ளியை அணைபவனே, சோலைகளும் கமுக மரங்களும் சூழ்ந்த பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் சிவ லோகத்தில் கூடி விளையாட அருள் புரிய வேண்டும். 

ஒப்புக
பஞ்ச பாதகன் பாவி....  கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை ஆகியவை. 
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி... ............................................      .திருப்புகழ், பஞ்சபாதக 

விளக்கக் குறிப்புகள் 
கந்தி - கமுகு. சுகம் - கிளி. சந்தானம் - தேவ லோக தெய்வீக மரங்களுள் ஒன்று. மற்றவைகள்:  அரி சந்தானம் மத்தாரம், பாரிஜாதம், கற்பகம்,.
பாகு - துவர்ந்த பாக்கு. 

Meaning and explanations provided by 
Dr. C.R.  Krishnamurti,     Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published