உலகபசு பாச
தொந்த மதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசலசு வாச
சஞ்ச லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை
தும்பை யணிசேயே
சரவணப வாமு
குந்தன் மருகோனே
பலகலைசி வாக
மங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ
வந்த பெருமாளே.
-
பழநி
பதம் பிரித்து உரை
உலக பசு பாச தொந்தம் அது ஆன
உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர்
உலக = உலகத்திலுள்ள (ஆன்மாக்களைக் கட்டுப் படுத்தும்) பசுபாச = உயிர், பாசம் தொந்தம் அதுவான
= சம்பத்தப் பட்டதான உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் = உறவினர்களாகிய சுற்றத்தார், தாய், தந்தை, மனைவி, மக்கள் (முதலிய)
பந்தங்களாலும்
மல சல சுவாச சஞ்சலம் அதால் என்
மதி நிலை கெடாமல் உன்றன் அருள் தாராய்
மல
சல சுவாச சஞ்சலம் அதால் = மல, சலம், மூச்சு முதலான துன்பங்களாலும். மதி நிலை கெடாது
= புத்தி
நிலை கெடாத வாறு. உன்றன் அருள்
தாராய் = உன்னுடைய
திருவருளைத் தந்தருளுக.
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே
சரவண பவா முகுந்தன் மருகோனே
சலம் = கங்கை நதி அறுகு = அறுகம் புல் பூளை
= பூளைப்பூ
தும்பை = தும்பை
அணி சேயே = இவைகளை
அணியும் சிவபெருமானது குழந்தையே சரவணபவ = சரவணபவனே முகுந்தன் = திருமாலின் மருகோனே = மருகனே.
பல கலை சிவ ஆகமங்கள் பயில்வோனே
பழநி வாழ வந்த பெருமாளே.
பல கலை = பற்பல நூல்களாலும் சிவாமகங்கள் = சிவாமகங் களாலும்
பயில்வோனே = போற்றப்படுபவனே
பழனி மலை வாழ வந்த பெருமாளே = பழனி மலையில் எழுந்தியருள வந்திருக்கும்
பெருமாளே.
சுருக்க
உரை
உற்றார், உறவினர், மனைவி, மக்கள் முதலிய
பாச பந்தங்களாலும், மலம், சலம், மூச்சு முதலான துன்பங்களாலும், என புத்தி நிலை கெடாதவாறு
உன் திருவருளைத் தந்தருளுக.
கங்கை, அறுகம்புல். பூளை, தும்பை இவைகளை
அணிந்த சிவபெருமானுடைய குழந்தையே. சரவண பவனே. முகுந்தன் மருகனே. பல நூல்களாலும், சிவமகங்களாலும்
போற்றப் படுபவனே. பழனி மலையில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. என் புத்தி கெடாமல்
உனது அருளைத் தர வேண்டுகிறேன்.
விளக்கக்
குறிப்புகள்
அ.
மதி நிலை கெடாமல் ....
ஆன்மாக்களுக்கு
உள்ள அறிவை ஆணவ மலம் மறைத்து அறியாமையை உண்டு செய்கின்றது.
ஆ.
சிவாகமங்கள் ..... சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சரியை,
கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களையும் விளக்கி ஆகமங்களைக் கூறினார்.
இதைப்பற்றிய
குறிப்பை பின்னால் பாடல் 369 விளக்கத்தில் காணலாம்.
ஒப்புக: நாலாறு
மாகத்தின் நூலாய ஞானமுத்தி
நாடோறு நானுரைத்த நெறியாக
............................... திருப்புகழ் (நாவேறு)
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும்
அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்................... திருப்புகழ் ( அவனிதனிலே)

No comments:
Post a Comment
Your comments needs approval before being published