F

படிப்போர்

Wednesday 19 September 2012

84.புடவிக் கணி

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
        கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
         புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்         சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
        கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
        புதகர்த் தரகர பரசிவ னிந்தத்                          தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
        செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
        றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக்     குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
         கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
        டிடவிக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்    கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
          சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
        புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத்              தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
          குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
         புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்           குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
        கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
         பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற்      பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
        கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
        பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப்              பெருமாளே.
-84 பழநி

பதம் பிரித்து உரை

புடவிக்கு அணி துகில் என வளர் அந்த
கடல் எட்டையும் அற குடி முநி எண் கண்
புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர் வேதன்

புடவிக்கு = பூமிக்கு அணி துகில் என = உடுக்கப்படும் ஆடை உன வளர் = பரந்துள்ள அந்த எட்டுத் திக்குகளிலும் உள்ள கடல் எட்டையும் = அந்த எட்டுக் கடல்களை அற குடி = ஒட்டக் குடித்த முநி = (அகத்திய) முனிவர் எண் கண் = எட்டுக் கண்களை உடையவரும் புநித = சுத்தமான சத தள = நூற்றிதழ்த் தாமரையில் நிலை கொள் = நிலையாக இருப்பவருமாகிய சம்புச் சதுர் வேதன் = நான்கு வேதங்களிலும் வல்லவராகிய பிரமன்.

புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி
கடினத்தொடு சில சிறு நகை கொண்ட
அற்புத கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர்

புரம் எட்டு எரி எழ = (திரி) புரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி கனல் சிந்த = (நெற்றிக் கண்ணிலிருந்து) நெருப்பை வீசி கடினத்தோடு = வன்மையுடன். சில = சற்று. நகை கொண்ட = அற்பப் புன்னகையைக் கொண்ட அற்புத கர்த்தா = அற்புதத் தலைவரும் அரகர பரம சிவன் = அரகர மூர்த்தியாகிய பரம சிவன் இந்தத் தனி மூவரிட = ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய.

இட சித்தமும் நிறை தெளிவு உறவும் பொன்
செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்றிட
உற்பன மொழி உரை செய் குழந்தை குரு நாதா

சித்தமும் நிறை தெளிவுறவும்  = சித்தம் நிறைந்து தெளிவுறும் வண்ணம் பொன் செவியுள் = அவர்களது அழகிய செவிகளில். பிரணவ ரகசியம் = பிரணவப் பொருளை அன்பு உற்றிட = அன்பு கொள்ளும்படி. உற்பன மொழி = (உனது திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளை உரை செய் = உரைத்த. குழந்தைக் குரு நாதா = குழந்தைக் குரு நாதனே

எதிர் உற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு
இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும்

எதிர் உற்ற அசுரர்கள் = (போருக்கு) எதிர்த்து வந்து அசுரர்கள் படை கொடு = தமது படைகளைக் கொண்டு சண்டைக்கு இடம் வைத்திட = சண்டைக்கு இடம் தந்ததால் அவர் குலம் முழுதும் பட்டிட = அவர்களுடைய குலம் முழுவதும் அழிதர உக்கிரமொடு = உக்கிரமாக வெகுளிகள் பொங்க = கோபம் பொங்க கிரி யாவும் = மலைகள் யாவும்.

பொடி பட்டு உதிரவும் விரிவுறும் அண்ட
சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து
அப்புறம் அப் பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக

பொடி பட்டு உதிரவும் =பொடி பட்டு உதிரவும் விரிவுறும்= விரிந்த அண்டச் சுவர் = அண்டச் சுவர்கள் விட்டு அதிரவும் =பிளவு பட்டு
 அதிர்ச்சி கொள்ள முகடு = (அண்டத்து) உச்சி கிழிந்து = கிழிபட்டு அப்புறம் = அதற்கு அப்பாலுள்ள அப் பரவெளி = ஆகாய வெளி எல்லாம் கிடு கிடு என்னும்=கிடு கிடு என்று சத்தமுமாக =சத்தப்
படும்படி.

பொருது கையில் உள அயில் நிணம் உண்க
குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா

பொருது = சண்டை செய்து கையில் உள்ள அயில் = கையில் உள்ள வேல் நிணம் உண்க = (பகைவர்களின்) கொழுப்பை உண்ண குருதிப் புனல் = இரத்த நீர் எழு கடலினும் மிஞ்ச = ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாக புரவி = குதிரையாகிய. கன மயில் = பருத்த மயிலை நடவிடும் = செலுத்திய விந்தைக் குமரேசா = அற்புதக் குமரேசனே.

படியில் பெருமித தக உயர் செம் பொன்
கிரியை தனி வலம் வர அரன் அந்த
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்பு அதனாலே

படியில் = பூமியில் பெருமித = மேன்மையும் தக உயர் = தகுதியும் மிக்க செம்பொன் கிரியை = செம் பொன் மலையாகிய மேருவை தனி வலம் வர = தனித்து நீ வலம் வர அரன் = சிவ பெருமான் அந்தப் பலனை = அந்தப் பழத்தை கரி முகன் வசம் அருளும் = யானை முகன் கணபதிக்குக் கொடுத்த பொற்பு அதனாலே = தன்மையாலே.
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு
அக் கனியை தர விலை என அருள் செந்தில்
பழநி சிவகிரி தனில் உறை கந்த பெருமாளே.

பரன் வெட்கிட = (அந்தச்) சிவன் வெட்கம் கொள்ள. உள்ளம் மிகவும் = உள்ளத்தில் மிக. வெகுண்டு = கோபம் கொண்டு
அக் கனியை தரவில்லை என = அந்தப் பழத்தைத் தரவில்லை என்று அருள் செந்தில் = அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும் பழநிச் சிவகிரி தனில் = பழனிச் சிவகிரியிலும் உறை = வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே

சுருக்க உரை

பூமிக்கு ஆடை என்று சொல்லும்படியான எட்டுத் திசைகளில் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர், தாமரையில் வாழும் வேதம் ஓதும் பிரமன், திரி புரங்களைச் சிரித்து எரித்த சிவபெருமான் ஆகிய மூவரும், அவர்களுடைய சித்தம் தெளியும்படி, செவிகளில் பிரணவத்தின் பொருளை உரைத்த குழந்தைக் குரு நாதரே.

எதிர்த்து வந்த அசுரர்களும் அவர்கள் குலமும் முழுதும் அழிதர, கோபம் பொங்க, மலைகள் யாவும் பொடிபட்டு அதிர, அண்டச் சுவர்களும், உச்சிகளும் கிழிபட்டு, கிடு கிடு என சத்தப்படும் படி சண்டை செய்து, வேல் பகைவர்கள் கொழுப்பை உண்ணவும், இரத்த வெள்ளம் கடலினும் மிஞ்சி ஓடவும், மயிலைச் செலுத்திய குமரேசனே. பழத்தைத் தனக்குத் தராமல், கணபதிக்குத் தந்ததால், கோபித்து, சிவன் வெட்கம் கொள்ள, திருச்செந்தூரிலும், பழனியிலும் வந்து வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே, உம்மைத் துதிகின்றேன்.

Meaning and explanations provided by 
Dr. C.R.  Krishnamurti,   Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published