F

படிப்போர்

Thursday 13 September 2012

67.கருப்புவிலில்

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
        கடைக்கணொடு சிரித்தணுகு
        கருத்தினால் விரகுசெய்                                           மடமாதர்
 கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
        கனத்தவிரு தனத்தின்மிசை
        கலக்குமோ கனமதில்                                            மருளாமே
 ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
        உனைப்புகழு மெனைப்புவியில்
        ஒருத்தனாம் வகைதிரு                                          அருளாலே
 உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி
        யுரைக்கமறை யடுத்துபொருள்
        உணர்த்துநா ளடிமையு                                  முடையேனோ
 பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
        படிக்கடலு மலைக்கவல
        பருத்ததோ கையில்வரு                                      முருகோனே
 பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
        பணிப்பனிரு புயச்சயில
        பரக்கவே இயல்தெரி                                              வயலூரா
 திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப்பகைமை
        செயித்தருளு மிசைப்பிரிய
        திருத்தமா தவர்புகழ்                                                 குருநாதா
 சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
        திருப்பழநி மலைக்குளுறை
        திருக்கைவே லழகிய                                          பெருமாளே.
-       67 பழநி

பதம் பிரித்தல்

கருப்பு வி(ல்)லில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய
கடை க(ண்)ணொடு சிரித்து அணுகு
கருத்தினால் விரகு செய் மடமாதர்

கருப்பு = கரும்பு விலில் = வில்லில் மரு பகழி தொடுத்து  = வாசனை உடைய மலர்க் கணைகளைத் தொடுத்து மதன் விடுத்த அனைய = மன்மதன் செலுத்தியது போல் கடைக் க(ண்)ணொடு = கடைக் கண் நோக்குடன் சிரித்து அணுகும் = சிரித்து நெருங்கி கருத்தினால் = எண்ணத்துடன் விரகு செய் = உபாயச் செயல்கள் புரிகின்ற.

கத களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை
கனத்த இரு தனத்தின் மிசை
கலக்கும் மோகனம் அதில் மருளாமே

கதக் களிறு = கோபமுள்ள யானையும் திடுக்கம் உற = திடுக்கிடும்படி மதிர்த்து = செழிப்புற்று மிக எதிர்த்து = மிகவும் எதிர்த்து மலை கனத்த = மலை போல் பருத்துள்ள. இரு தனத்தின் மிசை = இரண்டு கொங்கைகளின் மேல் கலக்கும் = கலந்து கொள்ளும் மோகனம் அதில் = மோக வெறியில் மருளாமே = மயங்காமல்.

ஒரு படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி
உனை புகழும் எனை புவியில்
ஒருத்தனாம் வகை திரு அருளாலே

ஒருப் படுதல் விருப்பு உடைமை = மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் மனதில் வர = என் மனதில் உண்டாகும்படி நினைத்து அருளி = (உனது) திரு உள்ளத்தில் நினைத்து அருள் செய்து உனைப் புகழும் எ(ன்)னை = உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை ஒருத்தனாம் வகை அருளாலே= நிகரில்லாதவனாகும் வகையை உன்னுடைய திருவருளால்.

உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி
உரைக்கும் அ மறை அடுத்து பொருள்
உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ

உருத்திரனும் = உருத்திர மூர்த்தியும். விருத்தி பெற = விளக்கம் பெற வேண்டி அனுக்கிரகி எனக் குறுகி = (எனக்கு உபதேசித்து அருளுக) என்று உன்னை அணுகிக் கேட்க உரைக்கும் அ மறை = தேவரீர் அவருக்கு உபதேசித்த அந்த இரகசியப் பிரணவப் பொருளை உணர்த்தும் = அடியேனுக்கும் உணர்த்தும்படியான. நாள் அடிமையும் உடையேனோ = நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ?

பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் ஏழு
படி கடலும் அலைக்க வல
பருத்த தோகையில் வரு முருகோனே

பருப்பதமும் = மலையையும் உருப் பெரிய = பெரிய வடிவம் உள்ள அரக்கர்ளும் = அரக்கர்களையும் இரைக்கும் எழுபடி = ஒலிக்கின்ற எழுகின்ற கடலும் = (ஏழு) கடல்களையும் அலைக்க வல = அலைத்துக் கலக்க வல்ல பருத்த தோகையில் வரு முருகோனே = பருமை உள்ள மயிலில் மீது வரும் முருகனே.

பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல
பணி ப(ன்)னிரு புய சயில
பரக்கவே இயல் தெரி வயலூரா

பதித்த மரகத்தினுடன் இரத்தின மணி = பதிக்கப் பட்ட மரகதத்துடன் இரத்தின மணிகள் நிரைத்த = வரிசையில் அமைக்கப்பட்ட பல அணி = பல வகையான அணிகலன்களை அணிந்துள்ள பன்னிரு புயச் சயல = மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவரே பரக்கவே = விரிவாக இயல் தெரி = இயல் தமிழைத் தெரிந்த வயலூரா = வயலூர் முருகனே.

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப் பகைமை
செயித்தருளும் இசை பிரிய
திருத்த மாதவர் புகழ் குருநாதா

திருப்புகழை உரைப்பவர்கள் = திருப்புகழை சொல்பவர்களுடைய
வும் படிப்பவர்கள் = படிப்பவர்களுடையவும் மிடி = வறுமையும் பகைமை = பகைமையும் செயித்து அருளும் = தொலைந்து வெற்றித் தந்தருளும் இசைப் பிரிய = இசைப் பிரியனே திருத்த மாதவர் = ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர் புகழ் குரு நாதா = புகழ்கின்ற குரு நாதரே.

சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல்
திரு பழநி மலைக்குள் உறை
திருக்கை வேல் அழகிய பெருமாளே.

சிலை = வில் ஏந்திய குறவர் = குறவர்களுடைய இலைக் குடிலில் = ஓலைக் குடிசையிலும் புகை களக முகில் = புகை போன்ற கருமையுடைய மேகங்கள் புடை செல் = அருகில் தவழ்ந்து செல்லுகின்ற திருப் பழநி மலைக்குள் உறை = அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும் திருக்கை வேல் = திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே = அழகிய பெருமாளே.

சுருக்க உரை

விலை மாதர்களின் அங்கங்களின் சிறப்பால் அவர்களிடம் மயக்கம் கொள்ளாமல், உன்னுடன் ஒருமைப் பாடு உண்டாகும்படி என்னை இப் பூமியில்)அந்த இரகசியப்பிரணவப் பொருளை இந்த அடிமையும் பெறலாகுமா?

மயில் மீது வரும் முருகனே. மணிகள் பதித்த ஆபரணங்களை அணிந்த வயலூர் முருகனே. திருப்புகழை உரைப்பவர்களுக்கு வெற்றியைத் தந்தருளும் குரு நாதரே, குறவர்கள் குடிசையிலும், மேகங்கள் தவழும் பழனியிலும் வீற்றிருக்கும் வேல் ஏந்திய பெருமாளே, எனக்கு மறைப் பொருளை உணர்த்தும் நாள் என்று கிட்டும்?

விளக்கக் குறிப்புகள்

. ஒருப்படுதல் விருப்பு உடைமை.....
(ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்)
 .................................................................................................. இராமலிங்க அடிகள் திருவருட்பா
ஆ. புவியில் ஒருத்தனாம்...
(என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி ..... மாணிக்க வாசகர் (திருவாசகம் - போற்றித் திருவகவல்

இ. இது கரந்துறை பாடல் என்று பெயர் பெறும். ஒவ்வொரு அடியிலும் இறுதியில்உள்ள
     வரியை எடுத்து தனியே அமைத்தால் அது ஒரு தனித் திருப் புகழாக அமையும்.
    
கருத்தினால் விரகுசெய் மடமாதர்
   கலக்குமோ கனமதில் மருளாதே
ஒருத்தனாம் வகைதிரு வருளாலே
   உணர்த்துநா ளடிமையு முடையேனோ
பருத்ததோ கையில்வரு முருகோனே
  பரக்கவே லயல் தெரி வயலு\ரா
திருத்தமா தவர்புகழ் குருநாதா
   திருக்கைவே லழகிய பெருமாளே.

ஈ. உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி எனக் குறுகி........
(நாதா குமரா நமஎன் றரனார்
    ஓதாய் என ஓதிய தெப்பொருள்தான்).............................................................கந்தர் அனுபூதி
   
இந்தக் கருத்தை கூறும் மற்ற திருப்புகழ் பாடல்கள்.
  
 பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே).................................... (கொண்டாடிக்கொஞ்சு)
 செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
 த்வம்பெ றப்ப கர்ந்த
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
றுங்கு ருத்து வங்கு றையுமோதான்)...............................................................(சயிலாங்கனைக்கு)
   
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொட
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்
கினிது ணர்த்தியருள்வாயே............................................................................... (அகரமுதலென) 
  
 புத்ரெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் கருள் கூறும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே............................................................................ (துத்தி நச்ச)

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published