F

படிப்போர்

Monday 24 September 2012

98.கடாவினிடை

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
        கடாவினிக ராகுஞ்                                       சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
        கனாவில்விளை யாடுங்                         கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
        கிராமலுயிர் கோலிங்                                    கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
        றியானுமுனை யோதும்                               படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
        வியாகரண ஈசன்                                    பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
        விநாசமுற வேலங்                                 கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
        சுவாசமது தானைம்                                  புலனோடுஞ்
சுபானுமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
        சுவாமிமலை வாழும்                                 பெருமாளே.
-98 திருவேரகம்
சதா உன் புகழ் ஓத அருள், முருகா!
 
பதம் பிரித்து உரை

கடாவின் இடை வீரம் கெடாமல் இனிது ஏறும்
கடாவின் நிகர் ஆகும் சமனாரும்

கடாவின் இடை = எருமைக் கடாவின் மீது வீரம் கெடாமல் = தனது வீரம் குறையாமல்  இனிது ஏறும் = இனிதாக ஏறுகின்ற கடாவின் நிகர் ஆகும் = கடாவைப் போன்ற
சமனாரும் = எமனும்.

கடாவி விடு தூதன் கெடாத வழி போலும்
கனாவில் விளையாடும் கதை போலும்

கடாவி விடு தூதன் = தூண்டி அனுப்பிய தூதன் கெடாத வழி போலும் = தவறாத வழியில் வருவது போல வந்து  கனாவில் விளையாடும் = கனவில் விளையாடுகின்ற  கதை போலும் = கதையைப் போலவும்.

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு
இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும்

இடாது = பிறருக்கு ஈயாமல் பல தேடும் = பொருள்களைத் தேடிச் சேகரிக்கும். கிராதர் பொருள் போல் = கொடியவர் தம் பொருள் போலவும் இங்கு இராமல்= இங்கு நிலைத்து இருக்க முடியாமல் உயிர் கோலி = உயிரைக் கவர்ந்து போகும் இங்கு இதம் ஆகும்
= சுகம் தான்.

இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று
யானும் உனை ஓதும்படி பாராய்

இது ஆம் என = இவ் வாழ்க்கை என்று உணர்ந்து இரு போதும் = காலை மாலை இரு வேளையும் சதா = எப் போதும் இன் மொழியால் இன்று = இனிய மொழிகளால் இன்று யானும் உனை = அடியேனும் உன்னை ஓதும்படி பாராய் = ஓதும்படி கண் பார்த்து அருள்வாயாக.

விடாது நட நாளும் பிடாரி உடன் ஆடும்
வியாகரண ஈசன் பெரு வாழ்வே

விடாது நட நாளும் = விட்டுக் கொடுக்காது நடனத்தை நாள் தோறும் பிடாரி உடன் ஆடும் = காளியுடன் ஆடுகின்ற வி யாகரண ஈசன் = இலக்கணம் அறிந்த சிவபெருமானின் பெரு வாழ்வே =  சிறந்த குழந்தையே.

விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும்
விநாசம் உற வேல் அங்கு எறிவோனே

விகாரம் உறு சூரன் = துர்க்குணம் கொண்ட சூரனுடைய. பகார உயிர் வாழ்வும் = அலங்காரமான உயிரும் வாழ்வும் விநாசம் உற = அழியும்படி. வேல் அங்கு எறிவோனே = வேலை அன்று எறிந்தவனே.

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும்
சுவாசம் அது தானை ஐம்புலனோடும்

தொடாது = தொட முடியாமல் நெடு தூரம் தடாது = நீண்ட தூரம் தடை படாமல் மிக ஓடும் = அதிகமாக ஓடுகின்ற. சுவாசம் அது தானை = மூச்சையும் ஐம்புலனோடும் = ஐம்புலன்களையும்.

சுபானம் உறு ஞானம் தபோதனர்கள் சேரும்
சுவாமி மலை வாழும் பெருமாளே.

சுபானம் உறு = நல்ல படி உள்ளே அடக்குகின்ற. ஞானம் தபோதனர்கள் = ஞான தவச் சீலர்கள் சேர்கின்ற. சுவாமி மலை வாழும் பெருமாளே = சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

எருமையின் மீது ஏறும் யமனால் தூண்டப்பட்ட தூதர்கள் தவறாத வழியில் வருவது போலவும், கனவில் விளையாடும் கதை போலவும், யாருக்கும் ஈயாமல் சேர்த்து வைத்த பொருள் போலவும், இந்த உலகில் நிலைத்து இருக்க முடியாத வண்ணம் உயிரைக் கவர்ந்து போகும் சுகம் தான் இந்த நிலையற்ற வாழ்க்கை என்று உணர்ந்து, எப்போதும் உன்னை ஓதும்படி கண் பார்த்து அருள்க. 

காளியுடன் நாளும் நடனம் இடுகின்ற சிவபெருமானின் பெருவாழ்வே. துர்க்குணம் கொண்ட சூரனின் அலங்கார வாழ்வு அழியும்படி வேலை எய்தவனே. நீண்ட நேரம் ஓடுகின்ற மூச்சியையும், ஐம்புலன்களையும் அடக்க வல்ல ஞான தவசிகள் சேர்கின்ற சுவாமி மலையில் வாழும் பெருமாளே. உன்னை ஓதும்படி பாராய்.

ஒப்புக

1 தொடாது நெடுதூரம்.......ஞானந் தபோதனர்கள் சேரும்....
   ....நேர் அண்ட மூச்சையுள்ளே
    ஓட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல்
    சாதிக்கும் யோகிகளே           ---                                             கந்தர் அலங்காரம்
2 கடாவினிடை வீரம் கெடாமல்......
    தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
   மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
   தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்புமுளகதக் கடமாமேல்
                                                                                           ---- திருப்புகழ், தமரகுரங்குளு                                   
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
 காலினார் தந்துடன் கொடுபோகக்) ------  -                     ----- திருப்புகழ், காலனார்
சுவை யொளியூ றோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு                                                          --- திருக்குறள்

3.  இன்மொழியால் இன்று யான் உனை ஓதும்படி பாராய்....

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாத நாமம் நமச்சிவாயவே      ---                                                  சம்பந்தர் தேவாரம்

பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே                    – திருப்புகழ், கோலகுங்கும்

பிடாரி – பட்டரிகா என்ற சகஸ்ரநாமம் மருவி பிடாரி ஆனது
ஸ்ரீதேவீ கட்கமாலா' என்னும் மந்திர நாமாவளியில்
'ஸ்ரீபராபட்டாரிகா' 'ஸ்ரீபராபராபட்டாரிகா' என்று சொல்லப்படுகிறது. 'பட்டாரிகை' என்னும் சொல் சக்கரவர்த்தினியைக் குறிக்கும்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published