நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப
கர்ந்து சுகமேவி
மாமணங் கமழுமிரு கலமபா தத்தை நின்று பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு
கின்ற குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி
சந்து புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே
-
108
திருவேரகம்
பதம் பிரித்தல்
நாசர் தம் கடை
அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி
நாசர் தம் = கேடு செய்யும் கீழ் மக்களுடைய கடை தனில் = இடங்களில் சென்று விரவி = (அவர்களுடன்)
கலந்து நான் மெத்த
நொந்து = நான் மிகவும் அழிவுற்று தடுமாறி = தடுமாற்றம் அடைந்து.
ஞானமும் கெட அடைய
விழுவி ஆழ அத்தீ அழுந்தி மெலியாதே
ஞானமும் கெட = நல்ல அறிவும் கெட. அடைய = முழுமையும். வழுவி = (தவறான வழியில்) விழுந்து ஆழ் = ஆழமாக. அத்தீயில் அழுந்தி = அந்தத் தீ நெறியில் அழுந்தி மெலியாதே = (நான்) மெலிந்து போகாமல்.
மா சகம் தொழும்
உனது புகழில் ஒரு சொல் பகர்ந்து சுகம் மேவி
மா சகம் = சிறந்த உலகம் (எல்லாம்) தொழும் =
தொழுகின்ற உனது புகழில் = உனது புகழ் (வெள்ளத்தில்) ஒரு சொல் = ஒரு
சொல் அளவு பகுதியையாவது. பகர்ந்து = (எனக்குக்) கூறி சுகம் மேவி = (அதனால்) நான் நற் கதியை அடைந்து.
மா மணம் கமழும்
இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ
மா மணம் கமழும் = நறு மணம் வீசும் இரு கமல பாதத்தை = உன் இரண்டு திருவடித் தாமரைகளை நின்று பணிவேனோ = (மனம் ஒடுங்கி) நின்று பணிய மாட்டேனோ?
வாசகம் புகல
ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குரு நாதா
வாசகம் புகல = உபதேச மொழிகளை (நீ) சொல்ல ஒரு பரமர் தாம் = ஒப்பற்ற சிவபெருமானே மெச்சுகின்ற = மெச்சிப் புகழ்ந்த குரு நாதா = குரு
நாதரே.
வாசவன் தரு
திரு(வை) ஒரு தெய்வ ஆனைக்கு இரங்கும் மணவாளா
வாசவன் = இந்திரன் தரு திரு = போற்றி
வளர்த்த இலக்குமி போன்ற (ஐ, சாரியை) ஒரு = ஒப்பற்ற தெய்வ ஆனைக்கு இரங்கும் = தேவ சேனையின் பால் இரங்கிய மணவாளா = கணவனே.
கீசகம் சுரர்
தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும்
கீசகம் = மூங்கிலும். சுரர் தருவும் = கற்பகமும் மகிழும் = மகிழ மரமும் மா = மாமரங்களும் அத்தி = அத்தி
மரமும் சந்து = சந்தன
மரமும் புடை சூழும் =
பக்கங்களில் சூழ்ந்திருக்கும்.
கேசவன் பரவு
குரு மலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே.
கேசவன் பரவு = திருமால் போற்றிப் பரவுகின்ற குரு மலையில் = திருவேரகத்தில் யோகத்து அமர்ந்த = யோக நிலையில் அமர்ந்தருளும் பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
கேடு
செய்யும் கீழோரான விலைமாதர்கள் வசிக்கும் இடங்களுக்குச்
சென்று, அவர்களுடன் கலவி இன்பம் அனுபவித்து, தடுமாறி, அறிவு கெட்டு, தவறான வழியில் சென்று, தீ நெறியில் அழுந்த நான் மெலிவு உறாமல், உலகமெல்லாம் உனது புகழில் ஒரு சொல் அளவாவது எனக்குக் கூறினால், நான் நற்கதி அடைந்து, உன் திருவடித் தாமரைகளை மனம் ஒடுங்கி நின்று பணிய மாட்டேனா?
சிவபெருமான்
மெச்சும்படி அவருக்கு உபதேசம் செய்த குரு மூர்த்தியே. இந்திரன் போற்றி வளர்த்த
தேவசேனைக்குக் கணவனே, பல வகையான
மரங்கள் சூழ்ந்த சுவாமி மலையில் யோக நிலையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடிகளில் நின்று பணிய மாட்டேனா?
ஒப்புக:
1 1. தெய்வயானைக்கு
இரங்கு மணவாளா...
நவ மா மணி வடமும் பூத்த
தன மாது எனும் இபமின் சேர்க்கை
நழுவா வகை பிரியம் காட்டு
முருகோனே .. .திருப்புகழ், முகிலாமெனு
2.. மாசகம் தொழும் உனது புகழில் ஓர் சொல்...
நவ
லோகமும் கை தொழும் நிசதேவ அலங்கிருத
நலமான
விஞ்சை கருவிளை கோவே. ..திருப்புகழ், சிவனார்மனம்

No comments:
Post a Comment
Your comments needs approval before being published