F

படிப்போர்

Sunday 30 September 2012

112.மகரகேதனத்தன

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
      மதுர நாணி யிட்டு                           நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
      வலிய சாய கக்கண்                                மடமாதர்
இகழ வாச முற்ற தகையெ லாம்வெ ளுத்து
       இளமை போயொ ளித்து                     விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
      னினிய தாள ளிப்ப                            தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
      அதிர வேந டத்து                                  மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
      அடைய வாழ்வ ளிக்கு                  மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
      விழைசு வாமி வெற்பி                   லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
      வினவ வோது வித்த                           பெருமாளே
-       112 திருவேரகம்

பதம் பிரித்து உரை

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து
மதுர நாண் இட்டு நெறி சேர்வார்

மகர கேதனத்தன் = மீன் கொடியை உடையவனும் உருவு இலான் = உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் எடுத்து = கையில் எடுத்து. மதுர = இனிமை தரும் (கரும்பு வில்லில்). நாண் இட்டு = நாணை இட்டு. நெறி சேர்வார் = நல்ல நெறியில் இருப்பவர்களும்.

மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
வலிய சாயக கண் மட மாதர்

மலையவே = மயங்கித் திகைக்கும்படி வளைத்த சிலையின் ஊடு = வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த = மறைத்து வைத்த வலிய = வலிய. சாயகக் கண் = அம்பாகிய கண்ணை உடைய மட மாதர் = அழகிய (விலை) மாதர்கள்.

இகழ வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
இளமை போய் ஒளித்து விடு மாறு

இகழ = இகழும்படி. வாசம் உற்ற = (ஒரு காலத்தில்) மணம் இருந்த. தலை எலாம் வெளுத்து = தலை முழுமையும் வெளுத்து. இளமை போய் = இளமை என்பது கடந்து போய். ஒளித்து விடுமாறு = ஒளித்து விடும்படி.

இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே

இடை விடாதே = இடை விடாமல். எடுத்த பிறவி = நான் எடுத்த பிறவி என்பதின் வேர் அறுத்து = வேரை அறுத்து இனிய தாள் = உனது இனிமையான திருவடுடியை அளிப்பது ஒரு நாளே = நீ தந்து அருளுவதும் ஒரு நாள் கிட்டுமோ?

அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட
அதிரவே நடத்தும் மயில் வீரா

அகிலம் ஏழும் = ஏழு உலகங்கள் மீதும். எட்டு வரையின் மீது = அட்ட கிரிகளின் மீதும். முட்ட = முட்டும்படியாக. அதிரவே = அதிரும்படியாக. நடத்தும் மயில் வீரா = செலுத்துகின்ற மயில் வீரனே.

அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு
அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே

அசுரர் சேனை கெட்டு முறிய = அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய. வானவர்க்கு = தேவர்களுக்கு. அடைய வாழ்வு அளிக்கும் = முழு வாழ்வை அளித்த. இளையோனே = இளையவனே.

மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் உறைவோனே

மிக நிலா எறித்த = மிகவும் நிலவொளியை வீசுகின்ற. அமுத வேணி = அமுத சடையராகிய சிவபெருமான். நிற்க = நின்று கேட்க விழை = விரும்புகின்ற சுவாமி வெற்பில் உறைவோனே = சுவாமி மலையில் வீற்றிருந்து (உபதேசித்தவனே).

விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க
வினவ ஓதுவித்த பெருமாளே.

விரைய = விரைவில் ஞான வித்தை = ஞான மூலப் பொருளை அருள் செய் = (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தாதை = தந்தையாகிய சிவபெருமான் கற்க = அறிய வேண்டிக் கற்க வினவ = கேட்க. ஓதுவித்த = அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் தன் கரும்பு வில்லில் நாண் இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி, வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த அம்பு போன்ற கண்களை உடைய மாதர்கள் இகழும்படி, தலை முழுதும் வெளுத்து, இளமை கடந்து போய் மறைந்து விடும்படி, முடிவில்லாமல் நான் எடுத்த பிறவியின் வேரை அறுத்து, உனது, இனிய திருவடியைத் தருவதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?

ஏழு உலகங்களின் மீதும், எட்டு கிரிகளின் மீதும் முட்டும்படி அதிர, செலுத்துகின்ற மயில் வீரனே. அசுரர்களின் சேனைகள் கெட்டு அழியவும், தேவர்கள் வாழவும் அருளிய இளையோனே. சடைப் பிரானாகிய சிவபெருமான் நின்று கேட்க, சுவாமி மலையில் வீற்றிருந்து உபதேசம் செய்தவனே. பிரணவப் பொருளை அடியார்களுக்கு அருள் செய்கின்ற சிவபெருமான் அறிய வேண்டிக் கேட்க அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே. உன் திருவடியை எனக்கு அளிப்பது ஒரு நாள் ஆகுமோ?
ஒப்புக
1.    அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட...
 மேரு அடியிட எண்டிசை தூள்பட்ட அத்தூளின் வாரி
  திடர்ப்பட்டதே                      ...                                                                 கந்தர் அலங்காரம்

2. மிக நிலா எறிந்த அமுத வேணி...
     வெண் நிலா மிகுவிரி சடை அரவொடும்.                              ..                  சம்பந்தர் தேவாரம்.

விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க...
சிவபெருமான் ஒரு க்ஷணநேரம் தியானத்தில் இருக்க, முருகவேள் அவருக்கு பிரணவப் பொருளைத் தணிகையில் உபதேசித்தார் என்றும், அதனால் தணிகைக்கு க்ஷணிகாசலம் எனப் பெயர் வந்தது.                                                                                         தணிகைப் புராணம்

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன    ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்  ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்

விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

பூர்ணேந்து வாந்தாம்ருதை- பூர்ண சந்திர அம்ருத தரை வர்ஷிப்பவன் சிவன்

ஏழு உலகங்கள்
ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம் என்பன.

எட்டு மலை
இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்

Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,    
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan    

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published