F

படிப்போர்

Monday, 24 September 2012

97.ஒருவரையுமொருவர்

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
      திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
      துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்        சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
      கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
      தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந்      திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளிது என்றுஎன்
      செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
      கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்               டருமாமென்
கருணைபொழி கமலமுகமாறு மிந்துளந்
      தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
      கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்       தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
      தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
      திகழருண கிரிசொருப னாதி யந்தமங்                              கறியாத
சிவயநம நமசிவ கார ணன்சுரந்
      தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
      திருவுருவன் மகிழெனது தாய்ப யந்திடும்               புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
      புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
      குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந்                      திடுவோனே
 குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
      பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
      குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம்                  பெருமாளே.
-       97 திருவேரகம்

பதம் பிரித்தல்

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து
இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்து நொந்து
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து = ஒருவர் போவது ஒருவருக்குத் தெரியாத வண்ணம் (பொதுமகளிர் வீட்டைத் தேடித்) திரிந்து. இரு வினையின் இடர் கலி = நல் வினை தீ வினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும் கலக்கமும் அடைந்து. நொந்து நொந்து = மனம் வேதனைப்பட்டு உலையில் இடு மெழுகு அது என வாடி = நெருப்பு அடுப்பில் இட்ட மெழுகு போல வாட்டமுற்று முன் செய் = முன் பிறப்பில் செய்த வஞ்சனையாலே = வஞ்சனை களின் பயனாக.

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும்
கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து
ஒளிரும் மி(ன்)னல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை

ஒளி பெறவே எழுபு = பெருமையுடன் விளங்கி எழுந்து மர பாவை துன்றிடும் = (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியுள்ள கயிறு விதம் என மருவி = கயிறு போலப் பொருந்தி ஆடி = பல ஆட்டங்களை ஆடி. விண் பறிந்து = வானத்தில் வெளிப்பட்டு ஒளிரும் = ஒளி வீசும் மி(ன்)னல் உரு அது என ஓட = மின்னலின் உருவு போல ஓடி (இறுதியில். அங்கம் வெந்திடுவேனை = உடல் வெந்து போய் மறைகின்ற என்னையும். 

கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என்
செவி இணையில் அருளி உருவாகி வந்த என்
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென்

கருதி = அடியாருள் ஒருவனாக எண்ணி ஒரு பரம பொருள் ஈது என்று = ஒப்பற்ற பரம் பொருள் இது என்று என் செவி இணையில் = என்னுடைய இரண்டு காதுகளில் அருளி = அருள் செய்து உருவாகி வந்த = இம்மனித உரு எடுத்து வந்துள்ள என் கரு வினையொடு = என் பிறப்பு வினையையும் அரு மலமும் = அரிதான மும்மலங்களையும். நீறு கண்டு = பொடியாக்கி தண் தரு = குளிர்ச்சியைத் தருவதும் மா மென் = பெருமை வாய்ந்ததும் மேன்மை உடையதும் ஆகிய. 

கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம்
தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய்

கருணை பொழி= கருணையைப் பொழிகின்ற கமல முகம் ஆறும் = தாமரை மலர் போன்ற ஆறு முகங்களும். இந்துளம் தொடை= கடப்ப மாலையும் மகுட முடியும் = இரத்தின மணி மகுடங்கள் தோன்றவும் ஒளிர் சரண் நூபுரம் = ஒளி பொருந்திய பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகள் கலகலென = கலகல என்று ஒலிக்க மயிலின் மிசை ஏறி வந்து = மயிலின் மேல் ஏறி வந்து உகந்து = மகிழ்வுடன். என்னை ஆள்வாய் = என்னை ஆண்டருள்க.

திரி புரமும் மதன் உடலு(ம்) நீறு கண்டவன
தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ் அருண கிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத

திரிபுரமும் = முப்புரங்களையும். மதன் உடலும் = மன் மதனுடைய உடலையும். நீறு கண்டவன் = எரித்துச் சாம்பலாக்கியவரும். தருணம் மழ விடையன் = மிகவும் இளமை வாய்ந்த இடப வாகனனும் நடராஜன்= சிற் சபையில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும் எங்கணும் திகழ் அருண = அங்கிங்கு எனாதபடி யாண்டும் விளங்கும் அருணகிரி சொருபன் = ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும் ஆதி அந்தம் அங்கு அறியாத = முதலும் முடிவும் அந்த அருண கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத. 

சிவய நம நம சிவய காரணன் சுரந்த
அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன்
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே

சிவாயநம நமசிவாய = சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின். காரணன் = மூல காரணப் பொருளானவரும் (சிவாயநம நம சிவாய காரணன் ஸூக்ஷ்ம ஐந்தெழுத்தானவரும், ஸ்துல ஐந்தெழுத்தானவரும், காரண ஐந்தெழுத்தானவரும்மான சிவ பிரான் எனவும் பொருள் கொள்ளலாம்)  சுரந்த அமுதம் அதை = ஞான அமுதத்தை அருளி = தந்தருளி எமை ஆளும் = என்னை ஆண்டவருமான எந்தை = எந்தை சிவபெருமானது தன் திரு உருவின் = தனது இடது பாகத்தில் இருந்து மகிழ் = மகிழும் எனது தாய் பயந்திடும் = என் தாயாகிய உமா தேவி அருளிய புதல்வனே = மகனே.

குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம்
புவன கிரி சுழல மறை ஆயிரங்களும்
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே

குருகு கொடியுடன் = சேவற் கொடியுடன் மயிலில் ஏறி = மயிலின் மீது ஏறி மந்தரம் புவன கிரி = மந்தர மலை முதலாக எல்லா மலைகளும் சுழல = சுழலவும் மறை ஆயிரங்களும் = எண்ணிலா வேதங்களும் குமர குரு என = குமர குரு என்று ஒலிக்கவும் வலிய சேடன் = வலிமை பொருந்திய ஆதி சேடன் அஞ்ச = பயப்படும்படி வந்திடுவோனே = வருபவனே. 

குற மகள் இடை துவள பாத செம் சிலம்பு
ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண்
குரு மலையின் மருவு குரு நாத உம்பர் தம் பெருமாளே.

குறமகள் இடை துவள = வள்ளி நாயகியின் இடை துவளவும். பாத செம் சிலம்பு ஒலிய = பாதங்களில் அணிந்த மென்மை வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய ஒரு = ஒப்பற்ற சசி மகளொடே கலந்து = இந்திராணயின் மகளான தெய்வ யானையோடு கலந்து திண் = வலிமையுள்ள குரு மலையில் மருவு = சாமி மலையில் வீற்றிருக்கும். குரு நாத = குரு நாதனே. உம்பர் தம் பெருமாளே = தேவர்கள் நாயகனே.

சுருக்க உரை

விலை மாதர் வீட்டைத் தேடி ஒருவர் போவது ஒருவருக்கத் தெரியாத வண்ணம் சென்று திரிந்து, துன்பமும் கலக்கமும் அடைந்து திரிகின்றவனும், மரப் பொம்மை போலக் கயிறால் ஆட்டி வைக்கப்பட்டு ஆடுபவனும் ஆகிய என்னையும் உன் அடியார்களுள் ஒருவனாகக் கருதி என் பிறப்புகளையும் மும்மமலங்களையும் நீக்கி, என்னை அருள மயிலின் மீது ஏறி வந்து ஆண்டருள்க. 

முப்புரங்களையும் மதனையும் எரித்த சிவபெருமான் இடது பாகத்தில் உறையும் உமா தேவி பயந்த மகனே, கோழிக் கொடியுடன் மயில் மீது ஏறி வந்து எண்ணலா வேதங்கள், குமரு குரு என்று ஓலமிட, ஆதி சேடன் அஞ்ச வருபவனே, வள்ளியுடன் தெய்வயானை உடன் கலந்த பெருமாளே. சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, என்னை ஆண்டருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்

1.மர பாவை துன்றிடும்....
ஐயா மரப்பாவை ஆடுவதும் சூத்திரிதன்
கைவாசி யோபாவை கற்றதோ - வெய்யவினை
என்னிச்சை யோஅருணை ஈசா படைத்தளிக்கும்
உன்னிச்சை அன்றோ உரை                   ----                 அருணகிரி அந்தாதி.

2. சிவாய நம - நமசிவாய.... 
சிவாய நம என்பது சூக்கும ஐந்தெழுத்து. நம சிவாய - ஸ்தூல ஐந்தெழுத்து பஞ்சாட்சரம்.
சிவாய சிவ என்பது காரண ஐந்தெழுத்து. சிவாய நம என்பது முத்தி ஐந்தெழுத்து

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published